search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cases registered"

    • ரூ.7.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.
    • பல்வேறு இடங்களில் சிக்னல்கள் பழுதாகியிருக்கிறது.

    கோவை,

    கோவை நகரில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக கடந்த 2021-ம் ஆண்டில், 16.11 லட்சம் வழக்குகள் பதிவானது. இதன் மூலமாக ரூ.6.91 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது.

    கடந்த 2022-ம் ஆண்டில் அதிவேகம் வகையில் 18,903 வழக்குகள், ஓவர் லோடு ஏற்றியதாக 106 வழக்குகள், சரக்கு வாகனத்தில் பயணிகள் ஏற்றி சென்றதாக 3,486 வழக்குகள், குடிபோதையில் வாகனத்தில் சென்றதாக 7,736 வழக்குகள், செல்போன் பேசியபடி வாகனம் இயக்கியதாக 15,634 வழக்குகள், சிக்னல் மீறியதாக 56,065 வழக்குகள், ஹெல்மட் போடாமல் இரு சக்கர வாகனங்கள் ஓட்டியதாக 4,87,338 வழக்குகள், சீட்பெல்ட் போடாமல் வாகனம் ஓட்டியதாக 35,170 வழக்குகள், அதிக உயரத்திற்கு லோடு ஏற்றி சென்றதாக 7,676 வழக்குகள் என மாநகரில் மொத்தமாக 10.48 லட்சம் வழக்குகள் பதிவானது.

    இதன் மூலமாக ரூ.7.22 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. ஸ்பாட் பைன் என்ற வகையில் ரூ.6.10 கோடி வசூலிக்கப்பட்டது.கடந்த 2021-ம் ஆண்டில் 866 விபத்துகள் நடந்தது. இதில் 234 பேர் இறந்தனர், 691பேர் காயமடைந்தனர். கடந்த ஆண்டில் 1,083 விபத்துகளில், 267 பேர் இறந்துவிட்டனர். 939 பேர் காயமடைந்துள்ளனர். 1

    கடந்த ஆண்டில் போக்குவரத்து விதிமுறை மீறல் தொடர்பாக குறைவாக வழக்குப்பதிவு செய்தும் அபராதம் அதிகமாக பெறப்பட்டுள்ளது. மேலும் கோவையில் பல்வேறு இடங்களில் சிக்னல்கள் பழுதாகியிருக்கிறது.

    மேம்பால பணிகள் அதிகளவு நடக்கிறது. வாகனங்கள் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி செல்லவேண்டிய நிலை இருந்து வருகிறது. குறிப்பிட்ட சில பகுதியில் நெரிசலில் காத்திருக்கும் வாகனங்கள் வேகமாக செல்ல முயற்சி செய்யும்போது விபத்து ஏற்படுவதாக தெரிகிறது. அவினாசி ரோடு, மேட்டுப்பாளையம் ரோடு, சத்தி ரோடு உள்ளிட்ட பிரதான ரோடுகளில் விபத்துகள் அதிகமாகி வருவதாக தெரியவந்துள்ளது.

    காலை, மாலை நேரங்களில் வாகனங்கள் சென்று வருவது அதிகமாக இருக்கிறது. அவினாசி ரோட்டில் இதர ரோடுகளை காட்டிலும் இரு மடங்கு வாகனங்கள் செல்கிறது. ஒரே ரோட்டில் அதிக வாகனங்கள் செல்வதால் பல கி.மீ தூரத்திற்கு நெரிசல் நீடிக்கிறது. மேம்பால பணி முடிந்தால் மட்டுமே இந்த ரோட்டில் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என போக்குவரத்து போலீசார் தெரிவித்தனர்.

    • சிறுமிகள், சிறுவர்களிடம் யாரேனும் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
    • யாரேனும் பொய் புகார் அளித்தால் அவர்களுக்கும் 6 மாதம் வரை தண்டனை கிடைக்கும்.

    கோவை,

    18 வயதுக்குட்பட்ட சிறுமிகள், சிறுவர்களிடம் யாரேனும் பாலியல் ரீதியாக அத்துமீறினால் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இதுபோன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடந்த 2012-ம் ஆண்டு முதல் போக்சோ சட்டப்பிரிவு மூலம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இந்த சட்டப்பிரிவில் கைது செய்யப்பட்டால் 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது. விரைவில் ஜாமீனில் வெளியே வர முடியாது. எனவே, யாரேனும் பொய் புகார் அளித்தால் அவர்களுக்கும் 6 மாதம் வரை தண்டனை கிடைக்கும்.

    மேலும் போக்சோ சட்டம் குறித்து பள்ளிக்கூடங்களில் சிறுவர், சிறுமிகளிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்பட்டு விடும் என கருதி பெற்றோர்கள் போலீஸ் நிலையங்களில் புகார் அளிக்க முன்வராமல் இருந்தனர்.

    எனவே, இந்த சட்டத்திருத்தத்தில் பாதிக்கப்படுபவர்களின் பெயர், முகவரி உள்ளிட்ட விவரங்கள் வெளியே தெரியக்கூடாது, ரகசியமாக விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

    இதனை தொடர்ந்து பாலியல் தொல்லையால் பாதிக்கப்படும் குழந்தைகள் தொடர்பான புகார்கள் அதிகளவில் போலீஸ் நிலையங்களில் வர தொடங்கின. அவர்களின் பெயர் விவரம் ரகசியம் காக்கப்பட்டு வருகிறது. கோவை சரகத்தில் கடந்த ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு போக்சோ வழக்குகள் அதிகமாக உள்ளது.

    இது குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    போக்சோ வழக்குகள் குறித்து முன்பைவிட தற்போது பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. எனவே, புகார் அளிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. கடந்த ஆண்டு கோவை சரகமான கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் 431 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

    போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தியதன் காரணமாக இந்த ஆண்டு 529 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதே போன்று கடந்த ஆண்டு 17 பேருக்கு போக்சோ வழக்கில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 87 பேருக்கு போக்சோ வழக்கில் தண்டனை பெற்று கொடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

    ×