என் மலர்
நீங்கள் தேடியது "Cargo vehicles"
- பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.
- பஸ்களை ஓட்டுவதற்கு இடையூறாக உள்ளது.
பல்லடம் :
பல்லடம் பஸ் நிலையத்திற்கு தினமும் 500 க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன. சனி, ஞாயிறு, திங்கள், மூன்று நாட்கள் அதிகளவிலான பஸ்கள், பஸ் நிலையத்திற்குள் வந்து செல்லும்.
இந்த நிலையில் திங்கட்கிழமையில் பல்லடம் வாரச்சந்தை நடைபெறுகிறது. அதற்கு காய்கறிகள், மற்றும் சரக்கு கொண்டுவரும் வாகனங்கள் பஸ் நிலையத்திற்கு உள்ளே நிறுத்தப்படுகின்றன. இதனால் பஸ்களை நிறுத்துவதற்கு இடம் இல்லாமலும், பஸ்களை ஓட்டுவதற்கு, இடையூறாகவும் உள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம், பஸ் நிலையத்திற்குள் திங்கட்கிழமைகளில் சரக்கு வாகனங்களை அனுமதிக்கக்கூடாது என அரசு பஸ் டிரைவர்கள் தெரிவித்தனர்.






