என் மலர்

  நீங்கள் தேடியது "cargo vehicle theft"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நத்தம் அருகே கள்ளச்சாவி போட்டு சரக்கு வாகனம் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நத்தம்:

  திண்டுக்கல் மாவட்டம், நத்தம் அருகே சமுத்திராபட்டியைச் சேர்ந்தவர் முகமது சலீம்(30). இவரது சரக்கு வாகனத்தை தனது வீட்டு முன்பு நிறுத்தி இருந்தார். இதை ஏற்கனவே நோட்டமிட்டு திட்டமிட்டிருந்த வாலிபர் ஒருவர் ஆள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் சரக்கு வாகனத்தை மாற்றுச் சாவி போட்டு எடுத்துச் சென்று விட்டார்.

  இது பற்றி புகாரின் பேரில் நத்தம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தினார். இதற்கிடையில் சந்தேகப்படும் படியாக நத்தம் வழியாக வந்த வாகனம் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தனர்.

  அப்போது அதை ஓட்டி வந்தவர் சிவகங்கை மாவட்டம், சக்கந்தி மில் கேட் பகுதியைச் சேர்ந்த ரமேஷ்(24) என்பது விசாரணையில் தெரிய வந்தது. சமுத்திராபட்டியில் காணாமல் போன வாகனம் என்பது தெரியவரவே அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

  ×