search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cardiac treatment"

    • மதுரை அரசு ஆஸ்பத்திரியில் 6 மாதங்களில் 1 லட்சத்து 68 ஆயிரம் பேருக்கு இருதய சிகிச்சை அளிக்கப்பட்டது.
    • இதய உறைப்பையில் நீர் கோர்த்த 10 பேருக்கு கத்தீட்டர் மூலம் சிகிச்சை தரப்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    மதுரை

    மதுரை அரசு மருத்துவமனையில் நடப்பாண்டு ஆகஸ்டு மாதம் வரை 6 மாதங்களில் இதயவியல் துறையில் 1 லட்சத்து 23 ஆயிரத்து 863 புறநோயாளிகளுக்கும், 4 ஆயிரத்து 836 உள்நோயாளிகளுக்கும் இலவச சிகிச்சை வழங்கப்பட்டு உள்ளது.

    ஒட்டுமொத்தமாக 1 லட்சத்து 28 ஆயிரத்து 699 பேருக்கு மறுவாழ்வு தரப்பட்டு உள்ளது. இதயவியல் துறையில் 40 ஆயிரத்து 853 பேருக்கு இ.சி.ஜி எடுக்கப்பட்டு உள்ளது. கர்ப்பிணி பெண்கள், பச்சிளம் குழந்தைகள் உள்பட மொத்தம் 40 ஆயிரத்து 853 பேருக்கு எக்கோ சிகிச்சை தரப்பட்டு உள்ளது. டிரெட்மில்லில் 653 பேருக்கு சோதனை செய்யப்பட்டு உள்ளது.

    உணவுக்குழாய் ஊடு எக்கோ மூலம் 231 பேருக்கு இதய வால்வின் சுருக்கம் கண்டறியப்பட்டு உள்ளது. இதயம் மற்றும் இதயத்தமனி ஆய்வகம் மூலம் 2 ஆயிரத்து 733 பேருக்கு சிகிச்சை தரப்பட்டு உள்ளது. 1631 பேருக்கு கொரனரி ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டு உள்ளது. 656 பேருக்கு இதய தமனியை ஆய்வு செய்து அடைப்பைக் கண்டுபிடித்து ரத்த குழாய் மூலம் கத்தீட்டர் செலுத்தி சோதனை செய்யப்பட்டு உள்ளது.

    மருத்துவமனைக்கு வந்த 6 மணிநேரத்திற்குள் 156 பேருக்கு இதய தமனியை ஆய்வு செய்து அடைப்பு நீக்கப்பட்டு உள்ளது. 97 பேருக்கு 24 மணிநேரத்திற்குள் அடைப்பு சரி செய்யப்பட்டு உள்ளது. 91 பேருக்கு இதயத்தில் கருவி பொருத்தப்பட்டு உள்ளது. 239 பேருக்கு தற்காலிக துடிப்பு முடுக்கி மூலம் இதயத்தில் கருவி பொருத்தப்பட்டு உள்ளது.

    122 பேருக்கு அறுவை சிகிச்சை இன்றி மைட்ரல் வால்வு சுருக்கம் பலூன் மூலம் சரி செய்யப்பட்டு உள்ளது.ஆரக்கிள் இடைசுவர் துவாரம் அடைப்பு சாதனம் மூலம் 21 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு உள்ளது. 4 பேருக்கு தமனி குழாய் அடைப்பான் கருவி மூலம் சிகிச்சை தரப்பட்டு உள்ளது. 4 பேருக்கு இதய மகா தமனி வால்வு குறுக்கத்தை பலூன் சிகிச்சை மூலம் சரி செய்து உள்ளனர்.

    4 பேருக்கு இதய நுரையீரல் தமனி குறுக்கம், பலூன் சிகிச்சை மூலம் சரி செய்யப்பட்டு உள்ளது. 56 நாள் குழந்தைக்கு இதய நுரையீரல் தமனி குறுக்கம் பலூன் சிகிச்சை மூலம் குணப்படுத்தப்பட்டது.

    நுரையீரல் ரத்த உறைவு நீக்கும் கத்தீட்டர் மூலம் 2 பேருக்கு சிகிச்சை செய்யப்பட்டு உள்ளது. ஒருவருக்கு சீறுநீரக தமனி குழாய் அடைப்பு சிகிச்சை தரப்பட்டு உள்ளது. ஒருவருக்கு தமனி குருதி குழாய் அடைப்பும், இன்னொருவருக்கு பெருந்தமனி சுருக்கமும் பலூன் மூலம் விரிவு செய்யப்பட்டு உள்ளது. இதய உறைப்பையில் நீர் கோர்த்த 10 பேருக்கு கத்தீட்டர் மூலம் சிகிச்சை தரப்பட்டதாக ஆஸ்பத்திரி நிர்வாகம் தெரிவித்து உள்ளது.

    ×