என் மலர்
நீங்கள் தேடியது "buy fish"
- சந்தையில் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர்.
- மத்தி 150-க்கும், நண்டு ரூ.250-க்கும், இரால் ரூ.420-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
திருப்பூர்:
திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் சந்தை உள்ளது. இந்த சந்தையில் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்டவை விற்பனை செய்யப்படுவது வழக்கம். மற்ற நாட்களை விட விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமை சந்தையில் அதிக கூட்டம் அலைமோதும். இந்நிலையில் இன்று சந்தையில் மீன் வாங்க ஏராளமான பொதுமக்கள் குவிந்தனர். இதனால் மீன் விற்பனையும் நன்றாக இருந்தது.
அதன்படி ஒரு கிலோ பாறை மீன் ரூ.140-க்கும், கட்லா ரூ.140-க்கும், ரோகு ரூ. 140-க்கும், கிலங்கா ரூ.150-க்கும், முரல் ரூ.300-க்கும், மத்தி 150-க்கும், நண்டு ரூ.250-க்கும், இரால் ரூ.420-க்கும் விற்பனை செய்யப்பட்டது.






