search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brazil court bars"

    பிரேசில் அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் லுலா போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. #Brazil #PresidentialElection #Lula
    பிரேசிலியா:

    பிரேசில் நாட்டில் அடுத்த மாதம் (அக்டோபர்) அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட முன்னாள் அதிபர் லுலா (வயது 72) விரும்புகிறார். அங்கு நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளில் அவர் முன்னிலை வகிக்கிறார்.

    ஆனால் இவர், அரசு எண்ணெய் கம்பெனியின் பணி ஒப்பந்தம் வழங்குவதற்கு ஒரு என்ஜினீயரிங் கம்பெனியிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ.7 கோடி) லஞ்சம் பெற்றதாக தொடரப்பட்ட வழக்கில் 12 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. தற்போது அவர் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

    இந்தநிலையில் அவர் அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு அந்த நாட்டின் தேர்தல் கோர்ட்டு நேற்று தடை விதித்து உத்தரவிட்டு உள்ளது. ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்டவர், தேர்தலில் நிற்க முடியாது என அந்த கோர்ட்டு கூறி விட்டது.

    ஆனால் இந்த உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்போவதாக லுலாவின் வக்கீல்கள் குழு அறிவித்து உள்ளது.

    இதே போன்று லுலாவின் தொழிலாளர் கட்சி கருத்து தெரிவிக்கையில், “லுலா அதிபர் தேர்தலில் நிற்பதற்காக எல்லா விதத்திலும் போராடுவோம்” என கூறியது. மேலும் லுலாவுக்கு ஆதரவாக வீதிகளில் இறங்கி போராடப்போவதாகவும் கூறி உள்ளது.  #Brazil #PresidentialElection #Lula 
    ×