search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Brahmortsava festival"

    • ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • வருகிற ஏப்ரல் 4-ந் தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தி லுள்ள நவ திருப்பதி தலங்களில் 9 வது தலமான ஆழ்வார் திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் பங்குனி பிரம்மோற்சவ திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடி யேற்றத்தை முன்னிட்டு அதிகா லையில் நடைதிறக்கப்பட்டு விஸ்வரூபம் திருமஞ்சனம் நடைபெற்றது. அதை தொடர்ந்து கொடிபட்டம் வீதி உலா வந்து மங்கள வாத்தியங்கள் முழங்க கொடி யேற்றப்பட்டது.

    திருவிழா நாட்களில் காலை, மாலை இரு வேளையும் பொலிந்து நின்ற பிரானும், நம்மாழ்வாரும் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. வருகிற 31-ந் தேதி கருட சேவை நடைபெறுகிறது. கருட வாகனத்தில் பொலிந்து நின்ற பிரானும் ஹம்ச வாகனத்தில் நம்மாழ்வாரும் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்து அருள் பாலிக்கிறார்.

    வருகிற ஏப்ரல் 4-ந் தேதி தேரோட்டம் நடைபெறு கிறது. 5-ந் தேதி தீர்த்தவாரி நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கான எற்பாடு களை கோவில் நிர்வாக அதிகாரி அஜித் தக்கார் கோவல மணிகண்டன் மற்றும் நிர்வாகத்தினர், ஆதிநாதர் ஆழ்வார் கைங்கர்ய சபா காரிமாறன் கலை காப்ப கத்தினர் செய்து இருந்தனர். நிகழ்ச்சியில் ராஜப்பா வெங்கடாச்சாரி உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ×