என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Boiler boiling water"

    ஈரோடு தொழிற்சாலையில் பாய்லர் கொதிநீர் கொட்டி உடல் வெந்து தொழிலாளி பலியானார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ஈரோடு:

    ஈரோடு அடுத்த பெரிய அக்ரகாரத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(வயது47). இவரது மனைவி பிரேமா.

    ஈரோடு அருகே உள்ள வெட்டுக்காட்டு வலசில் உள்ள ஒரு பிரிண்டிங் (பட்டறையில்) தொழிற்சாலையில் பால கிருஷ்ணன் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    தொழிற்சாலையில் உள்ள ஒரு பாய்லர் பழுதாகி இருந்தது. இந்த பழுதை பாலகிருஷ்ணன் சரி செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பாய்லரில் உள்ள கொதிநீர் ‘குபீர்’ என அவர் மீது கொட்டியது.

    இதில் உடல் முழுவதும் கொதி நீர் விழுந்து உடல் வெந்து பாலகிருஷ்ணன் துடித்தார்.உடனடியாக அவரை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    ×