search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP ruled states"

    பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். #FuelPriceCut
    மும்பை:

    பெட்ரோல், டீசல் விலை தினந்தோறும் வரலாறு காணாத வகையில் உயர்ந்து வந்த நிலையில், இது தொடர்பாக பிரதமர் மோடி, அமைச்சர்கள் அருண் ஜெட்லி, தர்மேந்திர பிரதான் மற்றும் அதிகாரிகளுடன் இன்று ஆலோசனை நடத்தினார். ஆலோசனை கூட்டத்தை அடுத்து அருண் ஜெட்லி செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, பெட்ரோல், டீசல் விலையில் மத்திய அரசு விதிக்கும்  கலால் வரி ரூ.1.50 குறைக்கப்படும் எனவும், எண்ணெய் நிறுவனங்கள் தங்கள் பங்குக்கு ரூ.1 குறைக்கும் எனவும் அறிவித்தார். மொத்தம் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்கப்பட்ட நிலையில், மாநில அரசுகளும் ரூ.2.50 குறைக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

    இதனை அடுத்து, பாஜக ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலையில் லிட்டருக்கு ரூ.2.50 குறைக்க பிரதமர் மோடி, பாஜக தலைவர் அமித்ஷா மாநில முதல்வர்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர். இதனால், மேற்கண்ட மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை ரூ.5 குறைகிறது.
    ×