என் மலர்
நீங்கள் தேடியது "BJP national convention"
பயங்கரவாத தாக்குதல், ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக கொடுத்திருக்கிறது என பாதுகாப்புத்துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார். #ParlimentElection #NirmalaSitharaman
புதுடெல்லி:
பா.ஜனதா கட்சியின் 2 நாள் தேசிய கவுன்சில் கூட்டம் நேற்று டெல்லி ராம்லீலா மைதானத்தில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தேசிய கட்சியின் தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்பட பலர் கலந்துகொண்டனர். சுமார் 12 ஆயிரம் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா, பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட பலர் பேசினர். இதில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது;-

வரும் பாராளுமன்ற தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி ஆட்சியின் இரு பெரிய சாதனைகளை அனைத்து மக்களுக்கும் விளக்கி சொல்ல வேண்டும்.
கடந்த 2014-ம் ஆண்டிற்கு பிறகு பயங்கரவாத தாக்குதல் மற்றும் ஊழல் இல்லாத ஆட்சியை பாஜக தலைமையிலான மத்திய அரசு கொடுத்திருக்கிறது.
கடந்த 5 ஆண்டுகளாக இந்திய மக்கள் அமைதியுடன் வாழ்ந்து வருகின்றனர். அமைதிக்கு ஊறு விளைவிக்கும் பயங்கரவாதிகளின் ஒவ்வொரு முயற்சியையும் இந்திய ராணுவம் முறியடித்து வருகிறது. அனைத்து தொண்டர்களையும் பாஜக சமமாக நடத்தி வருகிறது என தெரிவித்தார். #ParlimentElection #NirmalaSitharaman






