search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Bhomi Pooja"

    • சில்லரைபுரவு ஊராட்சிமன்ற தலைவர் குமாரிடம், விவசாயிகள் சார்பில் மெட்டல் சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
    • செங்குளம் குளக்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 23 லட்சத்தில் புதிய மெட்டல் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

    தென்காசி:

    தென்காசி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட சில்லரைபுரவு ஊராட்சியில் மத்தளம்பாறை அருகே உள்ள சோகோ மென்பொருள் நிறுவனத்தின் எதிரே அமைந்துள்ள செங்குளம் குளக்கரையினை சில்லரை புரவு, புல்லுக்காட்டுவலசை, முத்துமாலைபுரம், மத்தளம்பாறை உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்களின் விவசாய நிலங்களுக்கு செல்வதற்காக பயன்படுத்தி வந்தனர்.

    மெட்டல் சாலை

    எனினும் மழை காலங்களில் குளக்கரையை கடந்து செல்வதற்கு விவசாயிகள் பெரிதும் சிரமமடைந்து வந்தனர். இது குறித்து சில்லரைபுரவு ஊராட்சிமன்ற தலைவர் குமாரிடம் விவசாயிகள் சார்பில் மெட்டல் சாலை அமைத்து தர வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.

    அதன்படி ஊராட்சிமன்ற தலைவர் குமாரின் முயற்சியால் தமிழக அரசின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு தற்போது செங்குளம் குளக்கரையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ. 23 லட்சத்தில் புதிய மெட்டல் சாலை அமைப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. புதிய மெட்டல் சாலை அமைப்ப தற்கான பூமி பூஜையினை சில்லரைபுரவு ஊராட்சிமன்ற தலைவர் குமார், துணைத் தலைவர் முத்துச்செல்வி வெள்ளை பாண்டியுடன் சேர்ந்து தொடங்கி வைத்தார்.

    கலந்து கொண்டவர்கள்

    நிகழ்ச்சியில் விவசாய சங்க தலைவர் ராமச்சந்திரன், புல்லுக்காட்டுவலசை தர்மர், வார்டு உறுப்பினர் தாமரைச்செல்வன், அரசு ஒப்பந்ததாரர் முருகன், முத்துமாலைபுரம் முத்தையா மற்றும் ஊராட்சி செயலர் செண்பகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இச்சாலை பணிகள் நிறைவடைந்தால் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடைவர்.

    ×