search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "besiege a private hospital"

    • மருத்துவர்கள், ஆசிரியர்களின் அலட்சியமே காரணம் என உறவினர்கள் குற்றம்சாட்டினர்.
    • குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்.

    கோவை,

    கோவை மதுக்கரை சர்ச் காலனியை சேர்ந்தவர் பார்த்திபன். இவரது மனைவி– சகாயராணி. இந்த தம்பதிக்கு சவுமியா (13) என்ற மகள் உள்ளார்.

    இவர் கோவை குனியமுத்தூர் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கோடை விடுமுறைக்கு பின்பு பள்ளி திறக்கப்பட்டதால், மாணவி உற்சாகத்துடன் பள்ளிக்கு சென்றார்.இந்த நிலையில் பள்ளியில் இருந்து சவுமியாவின் பெற்றோருக்கு போன் வந்தது. அதில் பேசிய நபர்கள், பள்ளியில் இருந்த சவுமியா, மயங்கி விழுந்ததாக தெரிவித்தனர்.

    மேலும் பள்ளியில் இருந்த ஆசிரியர்கள் மாணவியை பள்ளி அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். இந்த நிலையில் சிகிச்சை பெற்று வந்த, சவுமியாவுக்கு மாலை 4 மணிக்கு மேல் இதய துடிப்பு படிப்படியாக குறையத்துவங்கியதாக தெரிகிறது. ஆனால் அடுத்தக்கட்ட சிகிச்சைக்கு அழைத்துச் செல்வதற்குள் சிறுமி உயிரிழந்தாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    இதையறிந்ததும் சிறுமியின் பெற்றோர் கதறி அழுதனர். மேலும் மாணவியின் உறவினர்களும் ஆஸ்பத்திரி முன்பு குவிந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகம் மற்றும், பள்ளி ஆசிரியர்கள் அலட்சியத்தாலேயே இறந்ததாக தெரிவித்தனர்.

    இது குறித்து சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கூறியதாவது:-

    எனது மகளை இந்த மருத்துவமனைக்கு அழைத்து செல்வதை ஆசிரியர்கள் எங்களிடம் தெரிவிக்கவில்லை. பள்ளியில் இருப்பதாகவே கூறினர். மீண்டும் நீண்ட நேரம் கழித்து அழைத்து தனியார் மருத்துவமனையில் சேர்த்ததாக கூறினார்கள், குழந்தைக்கு பிரச்சனை என்றால் மேல் சிகிச்சைக்கு கோவை அரசு மருத்துவமனை போன்ற பெரிய மருத்துவமனைக்கு அனுப்பிருந்தால் எனது மகளை காப்பாற்றி யிருக்கலாம்.

    ஆனால் அவசர சிகிச்சை பிரிவு கூட இல்லாத இந்த மருத்துவமனையில் சுயநினைவு இல்லாத குழந்தையை 5 மணி நேரம் வைத்துள்ளனர். மருத்து வர்கள் மற்றும் ஆசிரியர்கள் அலட்சியத்தால் தான் எங்க ளது குழந்தை உயிரிழந்தது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்தததும் குனியமுத்துர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மாணவியின் பெற்றோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர். பின்னர் போலீசார் சிறுமியின் உடலை பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவம னைக்கு அனுப்பி வைத்தனர்.

    இதற்கிடையே சிறுமி யின் பெற்றோர் குனிய முத்தூர் போலீசில் ஆஸ்பத்திரி மீதும், பள்ளி நிர்வாகத்தின் மீதும் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுமியின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியான பிறகே தெரியவரும்.

    ×