என் மலர்

  நீங்கள் தேடியது "beef biryani"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப வேண்டும் என சந்திரசேகரராவுக்கு ஒவைசி எம்.பி. வேண்டுகோள் விடுத்துள்ளார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
  ஐதராபாத்:

  தெலுங்கானா மாநில சட்டசபை தேர்தல் வருகிற டிசம்பர் 7-ந்தேதி நடக்கிறது. இதையடுத்து அங்கு கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

  சந்திரசேகராவின் தெலுங்கானா ராஷ்டிரீய சமிதி, காங்கிரஸ் தலைமையிலான மகா கூட்டணி, பா.ஜனதா, அகில இந்திய மஜ்லிஸ் கட்சி ஆகியவை இடையே கடும் போட்டி நிலவுகிறது.

  ஆதிலாபாத்தில் நடந்த கூட்டத்தில் பா.ஜனதா தேசிய தலைவர் அமித்ஷா பேசும் போது, அகில இந்திய மஜ்லிஸ் கட்சியை கடுமையாக சாடினார். அக்கட்சியுடன், சந்திரசேகரராவின் கட்சி ரகசியமாக நட்பு வைத்து உள்ளது. மஜ்லிஸ் கட்சியினருக்கு சந்திரசேகரராவ் பிரியாணியை அனுப்புகிறார் என்று கூறினார்.

  இதற்கு அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவர் ஒவைசி எம்.பி. பதிலடி கொடுத்துள்ளார்.

  குகட்பாலியில் நடந்த பொதுக்கூட்டத்தில் ஒவைசி பேசியதாவது:-

  பிரியாணி மீது உங்களுக்கு (பா.ஜனதா) திடீரென்று பாசம் ஏன் வந்தது என்று எங்களுக்கு தெரியவில்லை. சந்திரசேகரராவிடம் டெலிபோனில் பேசி அமித்ஷாவுக்கு மாட்டுக்கறி பிரியாணி அனுப்ப கேட்டுக்கொள்வேன்.  பிரதமர் மோடி திடீரென்று பாகிஸ்தானுககு சென்று முன்னாள் பிரதமர் நவாஸ் செரீப் வீட்டு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

  மோடியை நவாஸ்செரீப் விருந்துக்கு அழைக்கவில்லை. ஆனால் நவாஸ்செரீப் கையை பிடித்தபடி அவரது வீட்டுக்குள் மோடி சென்றார். அப்போது அங்கு என்ன சாப்பிட்டார் என்பதை அமித்ஷாவிடம் இருந்து தெரிந்து கொள்ள விரும்புகிறேன்.

  இவ்வாறு அவர் பேசினார். #AsaduddinOwaisi #AmitShah #ChandrasekharRao
  ×