search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Be spicy The gate of heaven will be opened"

    • 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    • கோவை ராமர் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    மேட்டுப்பாளையம்,

    கோவை மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற வைணவ திருத்தலங்களில் ஒன்றாக காரமடை அரங்கநாதர் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் ஆண்டுதோறும் புரட்டாசி 5 சனிக்கிழமைகள், மாசிமக தேர்த்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    கடந்த 2 வருடங்களாக வைகுண்ட ஏகாதசி விழா அரசின் கொேரான விதிமுறைகளை பின்பற்றி நடந்தது. இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசி விழா கடந்த மாதம் 23-ந் தேதி தொடங்கியது.

    அன்று காலை திருமொழிதிருநாள் தொடக்கம் என்னும் பகல்பத்து உற்சவம் ஆரம்பமானது. தொடர்ந்து திருவாய் மொழித்திறன் தொடக்கம் எனப்படும் ராப்பத்து உற்சவமும் தொடங்க உள்ளது.இந்த திருவிழா வருகிற 11-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    9-ம் நாளான நேற்று அரங்கநாதருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.நாளை சிகர நிகழ்ச்சியான வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    நாளை அதிகாலை 4.30 மணிக்கு சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சி நடக்கிறது. கோவை, காரமடை, மேட்டுப்பாளையம், அன்னூர், சிறுமுகை மற்றும் சுற்றுவட்டார பகுதிகள் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த மக்கள் சொர்க்க வாசல் திறப்பு நிகழ்ச்சியை காண கோவிலுக்கு வர உள்ளனர்.

    வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவிலில் பந்தல் அமைக்கும் பணி உள்பட பல்வேறு முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    இதுகுறித்து கோவில் செயல் அலுவலர் லோகநாதன் கூறியதாவது:- நடப்பாண்டில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் 20 ஆயிரம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதையொட்டி நகராட்சி நிர்வாகம், சுகாதாரத்துறை, தீயணைப்பு துறை, வருவாய்த்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் இணைந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது மீண்டும் கொரோனா பரவ தொடங்கி உள்ளதால் முக கவசம் அணிவது, தனிநபர் இடைவெளி உள்ளிட்ட கொரோனா விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

    மாற்றுத்திறனாளி பக்தர்கள் வசதிக்காக சக்கர நாற்காலிகள் தயாராக உள்ளன. கூட்ட நெரிசலை தவிர்க்க பக்தர்கள் முழு ஆதரவு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

    பொள்ளாச்சி கடைவீதியில் உள்ள கரிவரதராஜ பெருமாள் கோவிலில் வைகுண்ட ஏகாதசி விழா நாளை தொடங்குகிறது. இதனையொட்டி மூலவர் முத்தங்கி சேவை அலங்காரத்தில் நாளை மறுநாள் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    நாளை அதிகாலை 4 மணிக்கு மேல் 5 மணிக்குள் சொர்க்க வாசல் திறப்பு விழா நடைெபறுகிறது.

    ஜமீன் ஊத்துக்குளி கரிவரதராஜ பெருமாள் கோவிலிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது. இதேபோன்று பாலக்காடு ரோடு லட்சுமி நரசிம்மர்

    கோவில், டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாள் கோவில், கோவை சீனிவாச பெருமாள் கோவில், கோவை ராமர் கோவில்களிலும் வைகுண்ட ஏகாதசி விழா நடக்கிறது.

    ×