search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Barmy Army"

    • உலகக் கோப்பையில் முதன்முறையாக விராட் கோலி டக்அவுட் ஆனார்
    • இங்கிலாந்து அணியில் ஜோ ரூட், பென் ஸ்டோக்ஸ் டக்அவுட் ஆகினர்

    இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டி நேற்று லக்னோவில் நடைபெற்றது. பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக விளங்கிய ஆடுகளத்தில், இரு அணி பேட்ஸ்மேன்களும் ரன்கள் குவிக்க திணறினார்கள்.

    முதலில் பேட்டிங் செய்த இந்தியா 229 ரன்கள் சேர்த்தது. ரோகித் சர்மா 87 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 49 ரன்களும் அடித்தனர். இந்தியாவின் நட்சத்திர வீரரான விராட் கோலி ரன்ஏதும் எடுக்காமல் டக்அவுட் ஆனார். விராட் கோலியை கேலி செய்யும் வகையில், பார்மி ஆர்மி தனது டுவிட்டர் பக்கத்தில் வாத்து தலைக்குப் பதிலாக விராட் கோலி தலையை வைத்து போட்டோ ஒன்றை வெளியிட்டது.

    அதன்பின் 230 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய இங்கிலாந்து 129 ரன்களில் சுருண்டது. அந்த அணியின் முன்னணி வீரர்களான ஜோ ரூட் முதல் பந்திலும், பென் ஸ்டோக்ஸ் 9 பந்துகளை சந்தித்தும் டக்அவுட் ஆனார்கள்.

    இதை கேலி செய்யும் விதமாக பாரத் ஆர்மி, தனது டுவிட்டர் பக்கத்தில் வாத்து தலைக்குப் பதிலாக ரூட், ஸ்டோக்ஸ் தலையை வைத்து படத்தை வெளியிட்டு பதிலடி கொடுத்தது.

    இங்கிலாந்து அணியை ஆதரிக்கும் வகையில் ரசிகர்கள் பார்மி ஆர்மி அமைப்பு உருவாக்கினர். இந்த அமைப்பு இங்கிலாந்து விளையாடும் இடத்திற்குச் சென்று ஆதரவு தெரிவிக்கும். அதேபோல் இந்திய அணியை ஆதிரிக்கும் ரசிகர்கள் பாரத் ஆர்மி என பெயர் வைத்துள்ளனர். இந்திய அணி விளையாடும் இடத்திற்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்துவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இங்கிலாந்து அணியின் ஆதரவு குழுவான பார்மி ஆர்மி விராட் கோலிக்கு 2017 மற்றம் 2018-க்கான சர்வதேச வீரர் விருதை வழங்கியுள்ளது. #ViratKohli #BarmyArmy
    இங்கிலாந்து அணி சொந்த நாட்டில் விளையாடினாலும், வெளிநாட்டில் விளையாடினாலும் அந்த நாட்டு ரசிகர்கள் போட்டியை நேரில் பார்த்து ரசிகர்களை உற்காசப்படுத்துவார்கள். இப்படி உற்சாகப்படுத்தும் ரசிகர்களில் சிலர் ஒன்றிணைந்து பார்மி ஆர்மி என்ற அமைப்பை உருவாக்கியுள்ளனர்.

    இவர்கள் இங்கிலாந்து அணி எங்கெல்லாம் செல்கிறதோ, அங்கெல்லாம் சென்று அந்த அணியை உற்சாகப்படுத்துவார்கள். இவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் அமர்ந்து போட்டியை ரசிப்பார்கள்.

    இந்திய அணி தற்போது இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இந்த தொடர் ஆகஸ்ட் 1-ந்தேதி தொடங்குகிறது. இதற்கு முன் தற்போது எசக்ஸ் அணிக்கெதிராக பயிற்சி ஆட்டத்தில் விளையாடி வருகிறது.



    இந்த போட்டியின்போது பார்மி ஆர்மி அமைப்பினர் இந்திய அணி கேப்டன் விராட் கோலிக்கு 2017 மற்றும் 2018-ம் ஆண்டின் சிறந்த சர்வதேச வீரராக அறிவித்து, அவருக்கு விருது வழங்கியது. இதை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ளது.
    ×