என் மலர்
நீங்கள் தேடியது "Banana Fiber Manufacturing Center"
- மாவடியில் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் ‘திருமதி’ வாழை நார் உற்பத்தி மையம் திறப்பு விழா நடந்தது.
- பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்ற அடைந்து தங்களது கிராம பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும் என கலெக்டர் கார்த்திகேயன் பேசினார்.
களக்காடு:
களக்காடு அருகே உள்ள மாவடியில் மாவட்ட ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 'திருமதி' வாழை நார் உற்பத்தி மையம் திறப்பு விழா நடந்தது. மாவட்ட கலெக்டர் கார்த்திகேயன் உற்பத்தி மையத்தினை திறந்து வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
வேலைவாய்ப்பு இல்லாத பெண்கள், குறைவான வருமானம் பெறும் பெண்கள் அனைவரும் தங்களது பகுதியிலுள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களில் சேர்ந்து உழைப்பதன் மூலம் தங்களது பொருளாதரத்தை உயர்த்திக்கொள்ள முடியும்.
இந்த வருமானம், பெண்கள் தங்களது குடும்பத்தின் பொருளாதாரம் வளர்ச்சி அடையவும், குழந்தைகளின் கல்வி செலவிற்கும், உயர் கல்விக்கும் பயனுள்ளதாக அமையும். எனவே இந்த அறிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்டு பெண்கள் வாழ்க்கையில் முன்னேற்ற அடைந்து தங்களது கிராம பகுதியின் பொருளாதார முன்னேற்றத்திற்கும் உறுதுணையாக இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக மலையடிபுதூர் பஞ்சாயத்து தலைவர் ரமேஷ் வரவேற்றார். இதில் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் சாந்தி, களக்காடு யூனியன் தலைவர் இந்திரா ஜார்ஜ்கோசல், மாவட்ட தி.மு.க. பொருளாளர் ஜார்ஜ்கோசல், ரமேஷ் பிளவர் லிமிடெட் முதன்மை செயல் அலுவலர் சுரேஷ், யூனைடெட் வே ஆப் சென்னை திட்ட தலைவர் ஜெர்சலா வினோத், யூனியன் கவுன்சிலர் விஜயலெட்சுமி, வட்டார வளர்ச்சி அதிகாரிகள் முத்தையா, மணி, மகளிர் திட்ட உதவி அலுவலர் ராமர், செங்களாகுறிச்சி பஞ்சாயத்து தலைவர் சவுந்தரராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மலையடிபுதூர் பஞ்சாயத்து துணை தலைவர் பொன்ராணி நன்றி கூறினார்.






