என் மலர்
நீங்கள் தேடியது "badminton competitions"
- தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது.
- ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டு அணிகளும் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள்.
சங்கரன்கோவில்:
தென்காசி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் தமிழக அரசு சார்பாக மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. இதில் பால் பேட்மிட்டன் போட்டியில் திருவேங்கடம் ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜூனியர் ஆண்கள் அணியும் மாணவிகள் ஜூனியர் பெண்கள் அணியும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்.
ஸ்ரீ கலைவாணி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி இரண்டு அணிகளும் மாநில அளவில் விளையாட தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
வெற்றி பெற்ற அணிகளை பள்ளி முதல்வர், ஆசிரியர் - ஆசிரியர்கள், பொதுமக்கள், வெகுவாக பாராட்டினார்கள்.






