search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "baby killed"

    • 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர்.
    • பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார்.

    சேலம்:

    சேலம் சீலநாயக்கன்பட்டி குறிஞ்சி நகரை சேர்ந்தவர் பார்வதி (வயது 30). இவர் முதல் கணவரை பிரிந்து ராசிபுரம் புதுப்பட்டியை சேர்ந்த பூபதி (25) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். கணவன்-மனைவி 2 பேரும் கட்டிட வேலை செய்து வந்தனர்.

    இந்த தம்பதிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மேலும் பார்வதிக்கு முதல் கணவருக்கு பிறந்த குழந்தை என 3 குழந்தைகள் உள்ளனர். இதனிடையே பார்வதி மீண்டும் கர்ப்பமானார்.

    ஏற்கனவே 3 குழந்தைகள் உள்ள நிலையில் மீண்டும் கர்ப்பமாக இருப்பது தெரிந்தால் குடும்பத்தினர் ஏதாவது சொல்வார்கள் என நினைத்து அதனை யாருக்கும் தெரியாமல் கணவன்-மனைவி மறைத்தனர். நேற்று முன்தினம் மதியம் அவர்கள் 2 பேரும் மல்லூர் அருகே உள்ள நாழிக்கல்பட்டி கோட்டைகரடு பகுதிக்கு வந்தனர்.

    அப்போது பார்வதிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது. இதனால் அவருக்கு பூபதி பிரசவம் பார்த்துள்ளார். அப்போது பெண் குழந்தை இறந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த தம்பதியினர் அந்த பகுதியில் குழி தோண்டி குழந்தையின் உடலை புதைத்தனர். இதனிடையே சிறிது நேரத்தில் மயங்கிய பார்வதி, அங்கேயே பலியானார்.

    அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து மல்லூர் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று விசாரித்தனர். மேலும் குழந்தை மற்றும் பார்வதி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இதையடுத்து மனைவியை பிரசவத்திற்கு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லாமல் பொதுவெளியில் மருத்துவ விதிமுறைகளை மீறி பிரசவம் பார்த்தது மற்றும் பிரசவத்தின்போது குழந்தை இறந்தது பற்றி போலீசுக்கு தெரிவிக்காமல் புதைத்தது போன்ற குற்றத்திற்காக பூபதியை போலீசார் கைது செய்தனர்.

    பின்னர் போலீசார், அவரை பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, சேலம் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    தாய் இறந்த நிலையில், தந்தையை போலீஸ் கைது செய்துள்ளதால் அவர்களது குழந்தைகள் ஆதரவின்றி தவித்து வருகின்றனர்.

    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே கள்ளக்காதல் மூலம் பிறந்த குழந்தையை கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர்.
    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் கோழிக்கோடு அருகே உள்ள பாறமுக்கு காலனி பகுதியை சேர்ந்தவர் ரின்ஷா (வயது 24).

    இவருக்கு திருமணமாகி விட்டது. கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக அவரை பிரிந்து தாய் வீட்டில் வசித்து வந்தார். இவர் அக்கம், பக்கத்தினரிடம் அதிகமாக பேசி பழகாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தார்.

    இந்த நிலையில் அவரது வீட்டில் இருந்து குழந்தையின் அழு குரல் கேட்டது. பிறகு சிறிது நேரத்தில் அது ஓய்ந்து விட்டது. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ரின்ஷாவின் வீட்டிற்கு சென்று பார்த்தனர். அங்கு அவர்களுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் ஒரு குழந்தை இறந்து கிடந்தது. கையில் இருந்து ரத்தம் வடிந்த நிலையில் ரின்ஷா உயிருக்கு போராடிக் கொண்டு இருந்தார்.

    இதுபற்றி போலீசுக்கு பொது மக்கள் தகவல் கொடுத்தனர். போலீசார் அங்கு சென்று அந்த பெண்ணை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    மேலும் வீட்டில் இறந்து கிடந்த குழந்தையின் பிணம் கைப்பற்றப்பட்டு கோழிக்கோடு அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த குழந்தை ரின்ஷாவுக்கு பிறந்தது என்பதும், குழந்தை பிறந்த உடனேயே அது கழுத்தை நெரித்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டதும் பிரேத பரிசோதனையில் தெரியவந்தது.

    இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். அப்போது கணவரை பிரிந்து தனியாக வசித்துவந்த ரின்ஷாவுக்கும் ஒரு வாலிபருக்கும் கள்ளக்காதல் ஏற்பட்டு அதன்மூலம் அவர் கர்ப்பம் அடைந்தது தெரிய வந்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே வராமல் இருந்த ரின்ஷாவுக்கு வீட்டிலேயே குழந்தை பிறந்ததும் அதை மறைப்பதற்காக பெற்ற குழந்தையையே கழுத்தை நெரித்து கொன்று விட்டு கையை பிளேடால் அறுத்து தற்கொலைக்கு முயன்றது தெரிய வந்தது.

    தற்போது ரின்ஷா தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால் அவருக்கு சிகிச்சை முடிந்த பிறகுதான் அவரது கள்ளக்காதலன் யார்? என்பது பற்றி தெரிய வரும். ரின்ஷா மீது கொலை மற்றும் தற்கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்து உள்ளனர். மேலும் அவர் சிகிச்சை பெறும் வார்டுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. #tamilnews
    ×