என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ayyadurai Pandian"

    • நன்னகரத்தில் சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த ராம ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
    • ஆஞ்சநேயர் கோவிலை புனரமைத்து தருமாறு அய்யாத்துரைப்பாண்டியனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

    தென்காசி:

    தென்காசி மாவட்டம் வடக்கு நன்னகரத்தில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோவில் சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர், கொண்ட பட்டாபிஷேக சிலை ஒரே கல்லில் அமைந்துள்ளது சிறப்பம்சம். மேலும் பரதன், சத்ருகன் தனித்தனி சிலையாகவும், 5.5 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை தனி சிலையாகவும் அமைந்துள்ளது.

    இந்த கோவிலை புனரமைத்து கோபுரம் அமைத்து தருமாறு நன்னகரம் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் அ.தி.மு.க. பிரமுகர் அய்யாத்துரைப் பாண்டியனை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று அய்யாத் துரை பாண்டியன் நிதி வழங்கினார்.

    அப்போது நன்னகரம் பகுதி அனைத்து சமுதாய நாட்டாண்மைகள் முருகன், சைலப்ப பெருமாள், சங்கர், கோபால், கள்ளத்தான், ஆறுமுகம், சங்கர்ராஜ், குத்தாலிங்கம், அழகப்ப பிள்ளை, வெங்கடசுப்பிரமணியன், மாரியப்பன், சந்திரன், கணேசன் சுரேஷ் அமரன், அருள் மணிகண்டன், ஜெகன் வினோத், மாரிமுத்து, சூர்யா, ஈஸ்வரி, காளியம்மாள், தாமரை, செல்வி, மூக்கம்மாள் உட்பட நன்னகரம் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    ×