என் மலர்
நீங்கள் தேடியது "Temple Tower"
- ஆறுமுகம் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.
- தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
விராலிமலை:
விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர். இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் சுதந்திர தின நாளான இன்று காலை சுமார் 5 மணி அளவில் திடீரென்று அவர் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.
அங்கு நின்றவாறு கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
தீயணைப்புத் துறையினர் மாற்றுத்திறனாளி ஆறுமுகத்தை மீட்க கோவில் கோபுரம் மீது ஏறியபோது தானே வருவதாக கூறி உள்ளார். இதையடுத்து இறங்க முற்பட்டபோது தவறி விழுந்த அவர் உயிரிழந்தார்.
கோவில் கோபுரத்தில் இருந்து இறங்கியபோது மாற்றுத்திறனாளி ஆறுமுகம் தவறி விழுந்து உயிரிழந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
- கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர்.
- கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும்.
விராலிமலை:
விராலிமலை அருகே உள்ள கொடும்பலூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம், சமூக ஆர்வலர். இவர் விராலிமலை முருகன் கோவிலுக்கு சொந்தமான மலையை சுற்றியுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி கடந்த ஆண்டு விராலிமலை செல்போன் கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்தினார். அப்போது அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி அவரை சமாதானம் செய்தனர்.
இந்த நிலையில் சுதந்திர தின நாளான இன்று காலை சுமார் 5 மணி அளவில் திடீரென்று அவர் விராலிமலை முருகன் கோவில் ராஜகோபுரத்தில் உச்சியில் தேசியக் கொடியுடன் ஏறினார்.
அங்கு நின்றவாறு கோவில் நில ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும். கலெக்டர் பேச்சுவார்த்தைக்கு வர வேண்டும் என்று கூறி கோஷம் எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தகவல் அறிந்த விராலிமலை வட்டாட்சியர் ரமேஷ், கோவில் செயல் அலுவலர் சுதா, விராலி மலை காவல் ஆய்வாளர் லதா, இலுப்பூர் தீயணைப்பு மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறார்கள்.
- நன்னகரத்தில் சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்த ராம ஆஞ்சநேயர் கோவில் உள்ளது.
- ஆஞ்சநேயர் கோவிலை புனரமைத்து தருமாறு அய்யாத்துரைப்பாண்டியனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
தென்காசி:
தென்காசி மாவட்டம் வடக்கு நன்னகரத்தில் உள்ள ராம ஆஞ்சநேயர் கோவில் சுமார் 300 ஆண்டு பழமை வாய்ந்தது. இக்கோவிலில் ஸ்ரீ ராமர், சீதை, லட்சுமணர், ஆஞ்சநேயர், கொண்ட பட்டாபிஷேக சிலை ஒரே கல்லில் அமைந்துள்ளது சிறப்பம்சம். மேலும் பரதன், சத்ருகன் தனித்தனி சிலையாகவும், 5.5 அடி உயரம் கொண்ட ஆஞ்சநேயர் சிலை தனி சிலையாகவும் அமைந்துள்ளது.
இந்த கோவிலை புனரமைத்து கோபுரம் அமைத்து தருமாறு நன்னகரம் அனைத்து சமுதாய மக்கள் சார்பில் அ.தி.மு.க. பிரமுகர் அய்யாத்துரைப் பாண்டியனை சந்தித்து கோரிக்கை வைத்திருந்தனர். அதனை ஏற்று அய்யாத் துரை பாண்டியன் நிதி வழங்கினார்.
அப்போது நன்னகரம் பகுதி அனைத்து சமுதாய நாட்டாண்மைகள் முருகன், சைலப்ப பெருமாள், சங்கர், கோபால், கள்ளத்தான், ஆறுமுகம், சங்கர்ராஜ், குத்தாலிங்கம், அழகப்ப பிள்ளை, வெங்கடசுப்பிரமணியன், மாரியப்பன், சந்திரன், கணேசன் சுரேஷ் அமரன், அருள் மணிகண்டன், ஜெகன் வினோத், மாரிமுத்து, சூர்யா, ஈஸ்வரி, காளியம்மாள், தாமரை, செல்வி, மூக்கம்மாள் உட்பட நன்னகரம் பகுதி பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.