என் மலர்

  நீங்கள் தேடியது "ayodhya dispute"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அயோத்தியா விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது. #AyodhyaDispute #SupremeCourt
  புதுடெல்லி:

  அயோத்தியில் ராமர் கோவில் விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது. கடந்த மாதம் இந்த வழக்கை விசாரித்த அப்போதைய தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, அயோத்தி வழக்கை அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற தேவையில்லை என முடிவு செய்தது. 

  மசூதிக்கு சென்று தொழுகை செய்தல் இஸ்லாமின் ஒருங்கிணைந்த முறையா என்பதை விவாதிக்க அவசியம் இல்லை எனவும் தங்கள் உத்தரவில் நீதிபதிகள் சுட்டிக்காட்டியிருந்தனர். தொடர்ந்து இந்த வழக்கை புதிய அமர்வில் விசாரிப்பதாக அறிவித்தனர்.  இந்நிலையில், அயோத்தி விவகாரம் தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.

  இந்த வழக்கு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மற்றும் நீதிபதிகள் சஞ்சய் கிஷன் கவுல், கே.எம்.ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வின் முன் நாளை விசாரணைக்கு வர உள்ளது.  நாளை முதல் அயோத்தி வழக்கின் விசாரணை நடைபெற உள்ளது.  #AyodhyaDispute #SupremeCourt
  ×