search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Awarness Seminar"

    • நாகர்கோவில் சுரக்‌ஷா குடும்ப ஆரோக்கிய மையத்தை சேர்ந்தவர்கள் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினர்.
    • சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் தீமைகள், போதைக்கு அடிமையாவதை தடுத்தல் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பேசினார்.

    வள்ளியூர்:

    தெற்கு வள்ளியூர் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் மகளிர் குழு சார்பாக இளமை பருவத்தின் சவால்கள் மற்றும் பாலின துன்புறுத்தல் பற்றிய விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராஜன் தலைமை தாங்கி தலைமை உரையாற்றினார். மகளிர் குழு ஒருங்கிணைப்பாளர் சுஜா பிரேம ரஜினி வரவேற்று பேசினார்.

    நாகர்கோவில் சுரக்ஷா குடும்ப ஆரோக்கிய மையத்தை சேர்ந்தவர்கள் மாணவ- மாணவிகளுக்கான விழிப்புணர்வு கருத்துக்களை எடுத்துக் கூறினர். மாணவ-மாணவிகளுக்கு இளம் பருவத்தில் ஏற்படும் உடற்கூறு மாற்றங்கள், உடலை பேணும் முறைகள், பாலின வன்கொடுமைகளை தடுத்தல், சமூக ஊடகங்களால் மாணவர்களுக்கு ஏற்படும் தீமைகள், போதைக்கு அடிமையாவதை தடுத்தல், மாணவர்களின் உடல் மற்றும் மனரீதியான பிரச்சினைகளும் அவற்றை தீர்க்கும் வழிமுறைகள் பற்றியும் பேசினார்.

    இதில் நாகர்கோவில் சுரக்ஷா மையத்தின் பொரு ளாளர் அனிதா நடராஜன், குழு உறுப்பினர் தினேஷ் கிருஷ்ணன், நாகர்கோவில் நகராட்சி நிறுவனத்தின் ஓய்வு பெற்ற தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர் உமா செல்வன், சி.பி.ஐ.யின் முன்னாள் ஆலோசகர் ராஜேந்திரன் சிவராம பிள்ளை, டாக்டர் கிருஷ்ண சுரேந்திரா ஆகியோர் மாணவர்களுக்கு விழிப்புணர்வு கருத்துக்களை வழங்கினர். மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியே ஆலோசனைகள் வழங்கப்பட்டடு அவர்களது பிரச்சினைகள் கேட்டறிந்து தீர்வுகளும் கூறப்பட்டன. மகளிர்குழு உறுப்பினர் கலைச்செல்வி நன்றி கூறினார். இதில் ஏராளமான மாணவர்களும், பேராசிரியர்களும் கலந்து கொண்டனர். கருத்த ரங்கிற்கான ஏற்பாடுகளை கல்லூரி மகளிர் குழுவினர் செய்திருந்தனர்.

    ×