search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auditing Training"

    ஜி.எஸ்.டி.யை எதிர்கொள்ளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி அளிக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
    ஆரணி:

    ஆரணி அருணகிரி சத்திரத்தில் அரசு நடுநிலைப்பள்ளி திறப்பு விழா இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    தமிழகத்தில் 3 ஆயிரம் அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்பறைகள் கொண்டுவரப்படும். 1 லட்சம் ஆசிரியர்களுக்கு புதிய பாடத்திட்டங்கள் குறித்து கற்பித்தல் பயிற்சி அளிக்கப்படும்.

    ஜி.எஸ்.டி.யை எதிர்கொள்ளும் வகையில் 25 ஆயிரம் மாணவர்களுக்கு ஆடிட்டிங் பயிற்சி (சி.ஏ.) அளிக்கப்படும். 1, 6, 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டத்தில் செல்போனில் பாடங்களை பதிவிறக்கம் செய்து பாடம் நடத்தும் முறை கொண்டுவரப்படும். மத்திய அரசு தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டங்கள் உள்ளன. வரும் கல்வியாண்டில் கொண்டுவரப்படும் புதிய பாடத்திட்டம் மற்ற மாநிலங்களுக்கு முன் மாதிரியாக இருக்கும்.

    அரசு பள்ளிகளில் கழிவறைகளை சுத்தம் செய்ய ஆயிரம் வாகனங்கள் வாங்கப்பட உள்ளன. 20 பள்ளிகளுக்கு ஒரு வாகனம் என ஊழியர்கள் நியமிக்கப்பட்டு கழிவறைகள் சுத்தம் செய்யப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார். #TNMinister #Sengottaiyan
    ×