search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Auction of Shops at"

    • பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் பொது ஏலம் நடந்தது.
    • ஏலதாரர்கள் தங்களுக்கு அடிப்படை வசதி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    பவானி:

    பவானியில் பிரசித்தி பெற்ற கோவிலாக சங்கமேஸ்வரர் கோவில் விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் பின்புறம் உள்ள பரிகார மண்டபத்தில் பரிகார பொருட்கள் விற்கப்படும் உரிமைக்கான ஏலம், பிரசாத கடை, புக் ஸ்டால், ராஜகோபுரம் முன் பகுதியில் உள்ள தேங்காய் பழம் பூ விற்பனை செய்யும் கடைகள் மற்றும் டீக்கடை, ஓட்டல் போன்றவற்றிற்கு ஒராண்டு வாடகை உரிமம் பெறுவதற்கான ஏலம் கோவில் அதிகாரிகள் மூலம் நடைபெறுவது வழக்கம்.

    பவானி சங்கமேஸ்வரர் திருக்கோயிலின் பசலி 1433 க்கான பலவகை உரிம இனங்கள் பொது ஏலம் நேற்று மாலை ராஜகோபுரம் அருகில் உள்ள கோவில் திருமண மண்டபத்தில் நடந்தது.

    ஈரோடு மாவட்ட உதவி ஆணையர் அன்னக்கொடி, பவானி சங்கமேஸ்வரர் கோயில் உதவி ஆணையர் சுவாமிநாதன், கோவில் கண்காணிப்பாளர் நித்யா கோவில் பணியாளர்கள் மூலம் ஏலம் விடப்பட்டது.

    சங்கமேஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான 23 கடைகளில் நேற்று 17 கடைகளுக்கு ஒராண்டு வாடகை உரிமம், ஆற்றில் துணி சேகரம் செய்யும் உரிமம், ராஜ கோபுரம் முன் உள்ள கோட்டை விநாயகர் கோவி லில் பக்தர்கள் உடைக்கும் சிதறு தேங்காய் சேகரிக்கும் உரிமம், தென்னை மரங்கள் பலன் உரிமம் ஆகிய இனங்க ளுக்கு ஏலம் விடப்பட்டதில் 47.63 லட்சம் ரூபாய்க்கும்,

    கடந்த சில தினங்களுக்கு முன் கோவில் பின்பகுதியில் பரிகார பொருட்கள் விற்பனை செய்யும் உரிமை க்கான ஏலம் ரூ. 69 லட்சம் ரூபாய் என ஒரு கோடியே 16 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய்க்கு ஏலம் நடை பெற்று உள்ளதாக சங்கமே ஸ்வரர் கோவில் நிர்வா கத்தினர் தெரிவித்தனர்.

    இந்த ஏலத்தில் கலந்து கொண்ட ஏலதாரர்கள் தங்களுக்கு அடிப்படை வசதியான கழிப்பிட வசதி குடிநீர் வசதி போன்றவையை கோவில் நிர்வாகத்தினர் முறைப்படி செய்து தர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.

    கோவில் நிர்வாகத்தினர் உரிய நடவடிக்கை எடுத்து தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதி அளித்தனர். 

    ×