என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attempt to steal chain"

    • மோட்டார் சைக்கிளில் சென்றபோது துணிகரம்
    • வழிப்பறி கும்பலுக்கு போலீசார் வலைவீச்சு

    பீளமேடு,

    கோவை ராமநாதபுரம், பாலாஜி நகரை சேர்ந்த லோகநாதன் மனைவி அம்பிகா (வயது 54), இவர் காளப்பட்டி, நேரு நகரில் வசிக்கும் மகளை பார்ப்பதற்காக, இருசக்கர வாகனத்தில் புறப்பட்டு சென்றார்.

    அப்போது சித்ரா பகுதியில் இருந்து காளப்பட்டி செல்லும் ரோட்டில் இன்னொரு மோட்டார் சைக்கிள் பின்தொடர்ந்து வந்தது. அதில் 2 பேர் இருந்தனர்.

    அவர்கள் காளப்பட்டி மோட்டார் கம்பனி அருகே, அம்பிகா கழுத்தில் கிடந்த ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள 1 பவுன் தங்கச்சங்கிலியை பறிக்க முயன்றனர்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்மணி சுதாரித்து கொண்டு தங்க செயினை இறுக பற்றிக்கொண்டார். எனவே வழிப்பறி கும்பல் ஏமாற்றத்துடன் தப்பி சென்றது.

    இதுகுறித்து அம்பிகா அளித்த புகாரின்பேரில் பீளமேடு போலீசார் அம்பிகாவிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 2 பேரை தேடிவருகின்றனர்.

    ×