search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Attacker"

    அறநிலையத்துறை திட்டக்குழு இயக்குனர் மீது தாக்குதல் நடத்திய வியாபாரியை 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.
    போரூர்:

    திருமங்கலம் வெல்கம் பிளாக் பகுதியைச் சேர்ந்தவர் காமராஜ். இந்து அறநிலையத்துறையில் திட்டக்குழு இயக்குனராக உள்ளார். இவர் கே.கே. நகர் பாரதிதாசன் காலனி 60 அடி சாலையில் பழைய பொருட்கள் விற்பனை கடை நடத்தி வரும் சம்சு முகமது இப்ராகிம் என்பவரது கடைக்கு வந்தார். அங்கு மரத்தால் ஆன பூஜை அறை ஒன்றை வாங்குவதற்காக விலை கேட்டார். அப்போது காமராஜிக்கும் சம்சு இப்ராகிமுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனால் ஆத்திரம் அடைந்த சம்சு இப்ராகிம் திடீரென காமராஜை கன்னத்தில் ஓங்கி அடித்தார் இதுகுறித்து காமராஜ் எம்.ஜி.ஆர். நகர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் சம்சு முகமது இப்ராகிம் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். #tamilnews
    வாணரப்பேட்டையில் ரோட்டில் நின்றவர்களை கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தவர் கைது செய்யப்பட்டார்.

    புதுச்சேரி:

    வாணரப்பேட்டை அன்னை இந்திராகாந்தி நகரை சேர்ந்தவர் முகமதுஷெரிப் (வயது 32). சில நாட்களுக்கு முன்பு அதே பகுதியில் நின்று கொண்டிருந்தார் அப்போது வாணரப்பேட்டையை சேர்ந்த அசோக், தீனதயாளன் ஆகியோர் சேர்ந்து முகமதுஷெரீப்பை திட்டி கல்லால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    இதேபோல் பெரியார் நகரை சேர்ந்த சதீஷ்குமார் (21) தேங்காய்த்திட்டு பகுதியில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரையும் தீனதயாளன் அவரது நண்பர்கள் சேர்ந்து தாக்கினர்.

    இதையடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் பேரில் முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன், உதவி சப்-இன்ஸ்பெக்டர் காசிநாதன் ஆகியோர் விசாரணை நடத்தினர். இந்த நிலையில் தீனதயாளனை நேற்று போலீசார் கைது செய்தனர். அவர் மீது பல்வேறு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

    ×