search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arukankulam"

    • கிருஷ்ண பகவான் அவதரித்த நாளான ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி மற்றும் ரோகினி நட்சத்திரம் இணைந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.
    • நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா தேவ கிருஷ்ண கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அதிரசம், சீடை, அல்வா உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. மேலும் 10 ஆயிரம் லட்டுகள், 8 ஆயிரம் பானைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    நெல்லை:

    கிருஷ்ண பகவான் அவதரித்த நாளான ஆவணி மாதம் தேய்பிறை அஷ்டமி மற்றும் ரோகினி நட்சத்திரம் இணைந்த நாள் கிருஷ்ண ஜெயந்தி விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    நெல்லை மாவட்டம் அருகன்குளத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா தேவ கிருஷ்ண கோசாலையில் கிருஷ்ண ஜெயந்தி விழாவையொட்டி அதிரசம், சீடை, அல்வா உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. மேலும் 10 ஆயிரம் லட்டுகள், 8 ஆயிரம் பானைகள் அனைத்தும் தயாரிக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டு இருந்தது.

    இன்று அதிகாலை கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனமும், அதனை தொடர்ந்து வாசனை மலர்களான மல்லி, பிச்சி உள்ளிட்ட பூக்களை கொண்டு கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    அதன்பின்னர் விஸ்வரூப ஆரத்தி நடைபெற்றது. பின்னர் அங்கு அமைந்துள்ள கோசாலையில் சிறப்பு கோ பூஜை வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து கோவிலில் வம்சவிருத்தி ஹோமம், மகா அபிஷேகம் உள்ளிட்டவைகள் நடந்தது. பூரி ஜெகநாதர் உள்ளிட்ட ஆலயங்களில் சுவாமிக்கு நெய்வேத்தியமாக படைக்கப்படும் சப்பான் போக் எனப்படும் சிறப்பு நெய்வேத்தியம் இந்த ஆண்டு மகாதேவ கிருஷ்ணருக்கு நடைபெற உள்ளது.

    தொடர்ந்து நடைபெறும் சிறப்பு பூஜைகளில் பக்தர்கள் காலை முதலே காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். மாலையில் மண் பானையில் லட்டு, வெண்ணெய், நெய், முறுக்கு, சீடை உள்ளிட்டவை படைக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடக்கிறது.

    வண்ணார்பேட்டையில் உள்ள இஸ்கான் கோவிலில் காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, மாலையில் மகா சிறப்பு ஆரத்தி நடக்கிறது.

    இதேபோல் பாளை ராஜாக்கள் தெருவில் உள்ள பஜனை மடத்தில் சிறப்பு பூஜை நடந்தது. இரவு 7 மணிக்கு உறியடி நிகழ்ச்சி நடக்கிறது. டவுன் லட்சுமி நரசிங்க பெருமாள் கோவிலில் கிருஷ்ணருக்கு சிறப்பு அலங்கார தீபாராதனை நடக்கிறது.

    ×