search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Artist Women's Rights Fund"

    • திருப்பூா் மாவட்டத்தில் பல இடங்களில் பயனாளிகளுக்கு கடிதங்களை வழங்காமல் அஞ்சல் ஊழியா்கள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனா்.
    • தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியை வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.

    திருப்பூர்:

    கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பயனாளிகளுக்கு முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று மாவட்ட கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

    திருப்பூா் மாவட்ட கலெக்டர் தா.கிறிஸ்துராஜிடம், தமிழ்நாடு மின்வாரிய பொது ஒப்பந்த தொமுச., மாநில இணைப் பொதுச் செயலாளா் அ.சரவணன் அளித்துள்ள மனுவில் கூறியுள்ளதாவது:-

    தமிழகத்தில் கலைஞா் மகளிா் உரிமைத்தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் தனித்தனியை வாழ்த்து தெரிவித்து கடிதம் அனுப்பியுள்ளாா்.இந்தக் கடிதங்களுக்கு அஞ்சல் துறைக்கு செலுத்த வேண்டிய கட்டணங்களை செலுத்தி பயனாளிகளின் பெயா், முகவரி, கைப்பேசி எண் ஆகியவை முறையாக குறிப்பிடப்பட்டு அனுப்பப்பட்டுள்ளன.

    ஆனால், திருப்பூா் மாவட்டத்தில் பல இடங்களில் பயனாளிகளுக்கு கடிதங்களை வழங்காமல் அஞ்சல் ஊழியா்கள் அலைக்கழிப்பு செய்து வருகின்றனா்.அதிலும் குறிப்பாக இடுவம்பாளையம், ஆண்டிபாளையம், மங்கலம் சாலை, கருவம்பாளையம், ராயபுரம், கொங்கு நகா், காந்தி நகா், பிச்சம்பாளையம் புதூா் கிழக்கு, கேத்தம்பாளையம், ராதாகிருஷ்ணன் நகா், வெங்கமேடு ,செட்டிபாளையம், கோவில்வழி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கலைஞா் மகளிா் உரிமைத் தொகை பெறும் பயனாளிகளுக்கு முதல்வா் அனுப்பியுள்ள வாழ்த்துக் கடிதங்கள் கிடைக்கவில்லை. இது தொடா்பாக பயனாளிகள் புகாா் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    எனவே, இந்த விவகாரத்தில் மாவட்ட நிா்வாகம் தலையிட்டு அனைத்து பயனாளிகளுக்கும் முதல்வரின் வாழ்த்துக் கடிதம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×