என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Arrest operation"

    போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்துவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்படும் நிலை உள்ளது. போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
    சென்னை:

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை தொடர்ந்து சென்னை உள்பட தமிழகம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு உள்ளனர்.

    போராட்டங்கள் என்ற பெயரில் வன்முறை சம்பவங்களை அரங்கேற்றி ஆட்சிக்கு தேவையில்லாத கெட்ட பெயர் ஏற்படுவதை தடுப்பதற்காக முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதன் அடிப்படையாக சென்னையை பொறுத்தமட்டில் தற்போது போலீஸ் தடையை மீறி போராட்டம் நடத்துவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படும் நிலை உள்ளது.

    சமீபத்தில் ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டனர். பூங்கா ரெயில் நிலையத்தில் மறியலில் ஈடுபட்டோர்களும் சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று சென்னை நகர போலீசார் தெரிவித்தனர்.

    பொதுவாக ஒரு போராட்டம் அறிவிக்கப்பட்டால் இனிமேல் அந்த போராட்டத்தில் கலந்து கொள்பவர்கள் யார், யார்? அதன் பின்னணியில் இருந்து யாராவது வன்முறையை தூண்டி விடுகிறார்களா? என்பது குறித்து தற்போது மத்திய-மாநில உளவுப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். #tamilnews
    ×