search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Archaeological Adviser"

    • லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசர் மணி ஆய்வு செய்தார்.
    • கோவிலுக்கு தேவையான கோரிக்கைகளை அறங்காவலர்கள் தொல்லியல் ஆலோசகரிடம் மனுவாக அளித்தனர்.

    செய்துங்கநல்லூர்:

    ஸ்ரீவைகுண்டம் ஆய்வாளர் அலுவலகத்துக்கு உட்பட்ட இந்து அறநிலையத்துறை கோவில்களில் தற்போது அறங்காவலர்கள் நியமிக்க ப்பட்டுள்ளனர்.

    ஒவ்வொரு கோவில்களை யும் முன்னேற்றப்படுத்த இந்து அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் ஆய்வு மேற்கொண்டு கோவிலுக்கு தேவையான வேலைகள் தொடர்பான அறிக்கை சமர்பிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

    இதற்காக ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள முத்தாலங்குறிச்சியில் உள்ள மிகவும் பழமையான வீரபாண்டிஸ்வரர், லெட்சுமி நரசிம்மர், ராமவிநாயகர் கோவிலில் இந்து சமய அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசர் மணி ஆய்வு செய்தார்.

    சிவன் கோவிலை புதிதாக கல் கட்டிடமாக கட்டவும், கோவில் ஆகம விதிபடி தெட்சிணாமூர்த்தி, கன்னி விநாயகர், வள்ளி தெய்வானை சமேத முருகன், சனீஸ்வரன், கஜலெட்சுமி, பைரவர், நந்தீஸ்வரர், நவகிரகங்கள், கொடி மரம் பிரதிட்சை செய்வது குறித்தும், ராமவிநாய கரை சுற்றி கல் பிரகாரம் அமைக்கவும், லெட்சுமி நரசிம்மர் கோவிலையும் கல்கட்டிடமாக கட்டி முன்னால் கருட வாகனம் மற்றும் கொடி மரம் அமைக்கவும் அறங்கா வலர் காமராசு மனு கொடுத்தார். இதுகுறித்து அறிக்கையை அரசுக்கு சமர்பிப்பதாக அவர் கூறினார். அப்போது அவருடன் ஸ்ரீவைகுண்டம் இந்து அறநிலையத்துறை ஆய்வாளர் நம்பி, உதவியாளர் விசுவ நாதன், அர்ச்சகர் சேகர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோல் சிங்காத்தா குறிச்சி அரியநாச்சியம்மன், வல்லநாடு செல்வ விநாயகர், ஆழிவிளங்கும் பெருமாள், வசவப்பபுரம் ராமசாமி கோவில், விட்டிலாபுரம் விட்டீலேஸ்வரர் செய்துங்க நல்லூர் வியாக்கிரபாதீஸ்வரர், ஸ்ரீவைகுண்டம் சூடிகொடுத்த நாச்சியார் கோவிலும் அறநிலையத்துறை தொல்லியல் ஆலோசகர் மணி ஆய்வு செய்தார்.

    அறங்காவலர்கள் நாரயண சாமி, கேசவன், நாச்சியார், கோமதி, குருமாரியப்பன் உள்பட பலர் கலந்து கொண்டு கோவிலுக்கு தேவையான கோரிக்கைகளை தொல்லியல் ஆலோசகரிடம் மனுவாக அளித்தனர். அப்போது ஆய்வாளர் நம்பி உள்பட பலர் அவருடன் சென்றனர்.

    ×