search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Alwar Thirunagari Adinathar Alwar Temple"

    • ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மாசித் திருவிழா கொடி யேற்றத்துடன் இன்று தொடங்கியது.
    • 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட் டத்தில் உள்ள நவ திருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் பெருமாள் கோவிலில் நம்மாழ்வார் மாசித் திருவிழா கொடி யேற்றத்துடன் இன்று தொடங்கியது.

    நவதிருப்பதி தலங்களில் 9-வது தலமான ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் இன்று அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. நம்மாழ்வார் சன்னதி முன்புள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து 13 நாட்கள் நடைபெறும் திருவிழாவில் தினமும் காலை, மாலை சுவாமி நம்மாழ்வார் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார்.

    5-ந் தேதி (ஞாயிற்றுக் கிழமை) கருடசேவை நிகழ்ச்சியும், 9-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணிக்கு தேரோட்டமும் நடக்கிறது. 10-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவில் பெருமாள் தெப்ப உற்சவம் நடக்கிறது. சுவாமி பொலிந்து நின்ற பிரான் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். 11-ந் தேதி (சனிக்கிழமை) இரவு சுவாமி நம்மாழ்வார் ஆச்சாரியார்களுடன் தெப்பத்தில் எழுந்தருளி வலம் வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்து அருள் பாலிக்கிறார். 12-ந் தேதி (ஞாயிற்றுகிழமை) மாசி தீர்த்தவாரி நடைபெறுகிறது.

    விழாவில் இறுதி நாளான 13-ந் தேதி காலையில் சுவாமி நம்மாழ்வார் இரட்டை திருப்பதி கோவிலில் எழுந்தருளி அங்கு திருமஞ்சனம் கோஷ்டி, சாத்துமுறைக்கு பின் இரவு சுவாமி பல்லக்கில் ஆழ்வார் திருநகரி திரும்புகிறார்.

    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் அஜித், தக்கார் கோவல மணிகண்டன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    ×