என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "alternative location"

    • மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.
    • சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்ற

    அவிநாசி:

    அவிநாசியில் சாலையோர வியாபாரிகளுக்கு மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்கக் கோரி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் கோரிக்கை விடுத்துள்ளனா்.

    இதுகுறித்து அவிநாசி அனைத்து வியாபாரிகள் சங்கத்தினா் தாசில்தாரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- அவிநாசி நகரப் பகுதியில் கடைகளின் முன் உள்ள சாலையோரத்தில் புதிது புதிதாக கடைகள் உருவாகி செயல்பட்டு வருகின்றன. சாலையை ஆக்கிரமித்து கடைகளை நடத்துவதால் விபத்துகள் ஏற்படுகின்றன. சாலையோர கடைகளால் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனா்.

    எனவே, பாதசாரிகள், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத வகையிலும், சாலையோர வியாபாரிகளின் வாழ்வாதாரம் பாதிக்காத வகையிலும் அவா்களுக்கு மாற்று மாற்று இடம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×