search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Akayathamarais"

    • நீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது.
    • நீரை வேகமாக உறிஞ்சும் தன்மை உள்ளது.

    குனியமுத்தூர்,

    குறிச்சி குளக்கரை ஸ்மார்ட் சிட்டி திட்டம் மூலம் தற்போது அழகுபடுத்த–ப்பட்டு வருகிறது.

    குளத்தை சுற்றிலும் தார்சாலை அமைக்கப்பட்டு, நடைப்பயிற்சிக்கு செல்வது போல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆங்காங்கே வண்ண வண்ண விளக்குகளும் பொருத்தப்பட்டு வருகிறது.

    மாலை நேரங்களில் இதனை வேடிக்கை பார்ப்பதற்காக பலரும் இங்கு வருகின்றனர்.

    ஆனால் குளத்தின் அனேகமான பகுதி ஆகாயத்தா–மரைகளால் ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை கண்டு பொதுமக்களும், குளம் சீரமைப்போரும் கடும்அதிர்ச்சியில் உள்ளனர்.

    பொதுநலத்தில் அக்கறை கொண்ட பல்வேறு அமைப்புகள் அடிக்கடி குளத்தை பராமரித்து அங்குள்ள குப்பைகளை அகற்றி வருவது வழக்கம். தற்போது குளத்தில் நீர் நிரம்பி உள்ளதால் அவர்களால் அப்புறப்படுத்த முடிவதில்லை.

    இத்தகைய ஆகாய தாமரைகளால் குளத்து நீர் மாசுபடும் சூழ்நிலை ஏற்படுகிறது. மேலும் அத்தகைய ஆகாயத்தாமரைகள் நீரை வேகமாக உறிஞ்சும் தன்மை உள்ளது.

    இதனால் அதிவிரைவில் குளம் வற்றிப் போகும் சூழ்நிலை ஏற்படும். அதுமட்டுமின்றி நீரில் ஒரு வகையான துர்நாற்றம் ஏற்படும் வகையிலும் இந்த ஆகாயத்தாமரைகளுக்கு பங்கு உண்டு.

    எனவே கோவை மாநகராட்சி இதனை கவனம் கொள்ள வேண்டும்.விரைவில் ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்தி குளத்து நீரின் மென்மை தன்மையை பாதுகாக்க வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    ×