என் மலர்
நீங்கள் தேடியது "ajith kumar yadav"
ஊழல் காரணமாக 2019 பாராளுமன்றத் தேர்தலில் பெரும் இழப்பை சந்திப்போம் என யோகி ஆதித்யநாத்திடம் பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறியுள்ளார். #yogiadityanath #bjp #parliamentelection
லக்னோ:
உத்தரபிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தின் குன்னார் தொகுதியின் பா.ஜனதா எம்.எல்.ஏ. அஜித்குமார் யாதவ். ஜனவரி 3-ம் தேதி மாவட்டத்தில் காணப்படும் ஊழல் தொடர்பாக யோகி ஆதித்யநாத்திற்கு கடிதம் எழுதியுள்ளார். “மாவட்டத்தில் அதிகாரிகளின் ஊழல் நடவடிக்கை காரணமாக மக்களின் எண்ணம் மாநில அரசுக்கு எதிராக எழுந்துள்ளது.
ஊழல் நடவடிக்கைகளை தடுக்கவில்லை என்றால், 2019 பாராளுமன்றத் தேர்தலில் பெரும் தோல்வியை பா.ஜனதா சந்திக்கும்,” என கூறியுள்ளார்.
அஜித்குமார் யாதவ் செய்தியாளர்களிடம் பேசுகையில், “மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளில் பெரும்பாலானோர் ஊழலில் ஈடுபட்டுள்ளனர். ரூ. 200-300 விலையுடைய குப்பை பெட்டிகள் ரூ. 12 ஆயிரத்திற்கு வாங்கப்படுகிறது. மின்சார இணைப்பு இல்லாத கிராமங்களுக்கும் மின்கட்டணத்திற்கான ரசீது வழங்கப்படுகிறது,” என்று கூறியுள்ளார். #yogiadityanath #bjp #parliamentelection