என் மலர்
நீங்கள் தேடியது "Adiyyanar temple"
- வாடிப்பட்டி அருகே ஆதிஅய்யனார் கோவிலில் நடந்த புரட்டாசி பொங்கல் விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
- போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
வாடிப்பட்டி
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே நீரேத்தான்-மேட்டு நீரேத்தான் கிராமங்களுக்கு பாத்தியப்பட்ட ஆதி அய்யனார் கோவில் உள்ளது. பிரசித்தி பெற்ற இந்த கோவிலில் புரட்டாசி மாத பொங்கல் திருவிழா விமரிசையாக நடைபெறும்.
அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது. முதல் நாள் ஆதி அய்யனார் சந்தன காப்பு அலங்காரத்திலும், 2-ம் நாள் வெள்ளிகாப்பு அலங்காரத்திலும் காட்சி அளித்தார். முதல் நாளில் அய்யனார் கோவில் வீட்டில் இருந்து பொட்டி எடுப்பு ஊர்வலம் நடந்தது. அப்போது பொதுமக்கள் வாழை பழங்களை சூறை யிட்டனர்.
2-ம் நாள் தாதம்பட்டி நீரேத்தான் மந்தை திடலில் உள்ள நடுக்கல் அலங்கரிக் கப்பட்டு இருந்தது. அதனை பொதுமக்கள் வணங்கி சென்றனர். 2 நாள் திரு விழாவில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 100-க்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு முளைப்பாரி, பொங்கல் வைத்தல் உள்ளிட்ட நேர்த்தி கடன்களை செலுத்தினர். போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
வழக்கமாக 2-ம் நாள் திருவிழாவில் மஞ்சு விரட்டு நடத்தப்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக போலீசார் அனுமதி அளிக்காததால் மஞ்சு விரட்டு நடக்கவில்லை. இதனால் மாடு வளர்ப்போர், பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இனி மேலாவது வரும் திருவிழா வில் மஞ்சுவிரட்டு நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் வலியுறுத்தினர்.






