என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Actress Amala Paul"

    • பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.
    • பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.

    'சிந்து சமவெளி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் அமலாபால். தொடர்ந்து விஜய், விக்ரம், தனுஷ் உள்பட பல முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்தார்.

    ஜெகத் தேசாய் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்ட அமலாபாலுக்கு 'இலை' என்ற ஆண் குழந்தை இருக்கிறது.


    இந்நிலையில் தனது சினிமா வாழ்க்கை பற்றி அவர் அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது:-

    'சிந்து சமவெளி' படம் வெளியான சமயத்தில் எழுந்த விமர்சனங்கள் என்னை பயமுறுத்தியது. முக்கியமாக அந்த படம் பார்த்த என் அப்பா அதிகமாக வருத்தப்பட்டார். எனது கதாபாத்திரம் சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கத்தை என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை என்று கூறினார்.

    நாம் இதுபோன்ற கதாபாத்திரங்கள் செய்யக்கூடாது என்பதை அந்த படம் வெளியான பிறகுதான் புரிந்து கொண்டேன். அப்போது கேவலம் எனக்கு 17 வயது மட்டும் தான். இளம் நடிகை என்பதால் இயக்குனர் சொன்னதை கேட்டு குருட்டுத்தனமாக சம்மதித்து நடித்தேன்.

    இதனால் நான் வேதனைக்கு உள்ளாகியது மட்டுமின்றி, எனது சினிமா வாழ்க்கை கூட பாதிக்கப்பட்டது. அதன் பிறகு நான் நடித்த 'மைனா' பட புரமோஷனுக்கு கூட என்னை அழைக்கவில்லை.


    அதன் பிறகு எனக்கு கமல்ஹாசன், ரஜினிகாந்த் போன்ற மாபெரும் நடிகர்கள் கூட போன் செய்தார்கள். விபரீதமான எதிர்ப்பு காரணமாக எனக்கு ஏற்பட்ட பயத்தால் சென்னைக்கு என்னால் போக முடியவில்லை.

    நான் அதன்பிறகு சினிமாவில் வெற்றி பெற்று சாதித்தேன். ஆனால் அந்த விவாதத்துக்குரிய படம் மீண்டும் ரீலீஸ் ஆனது. அப்பொழுது கூட புரமோஷனல் மெட்டீரியல் தவறான வழியில் சென்று விவாதத்தை ஏற்படுத்தியது.

    இவற்றுக்கெல்லாம் பின்னணி சினிமா கேவலம் வியாபாரத்தை மட்டுமே லட்சியமாகக் கொண்டு தயாரிக்கப்படுகிறது என்பதை புரிந்து கொண்டேன்.

    இதை கருத்தில் கொண்டு ஒரு நடிகை எவ்வளவு பலமான அடி விழுந்தாலும் தாங்கிக் கொள்ள தயாராக இருக்க வேண்டும் என்பதை எனக்கு புரிய வைத்தது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • முதல் காட்சி முடியும் முன்பே திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாகவும் ஜோதிகா விமர்சித்தார்.
    • ஜோதிகாவின் பதிவை நடிகை அமலாபால் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    சிவா இயக்கத்தில் சூர்யா நடித்த கங்குவா படம் சமீபத்தில் திரைக்கு வந்து எதிர்மறை விமர்சனங்களை எதிர்கொண்டது. சூர்யாவின் மனைவியும் நடிகையுமான ஜோதிகா கங்குவா படத்துக்கு எதிரான விமர்சனங்களை கண்டித்தார். முதல் காட்சி முடியும் முன்பே திட்டமிட்டு எதிர்மறை விமர்சனங்களை பரப்புவதாகவும் விமர்சித்தார். இது பரபரப்பானது. இந்த நிலையில் ஜோதிகாவின் பதிவை நடிகை அமலாபால் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து அவரது கருத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

    மேலும் அமலாபால் வெளியிட்டுள்ள பதிவில், "கங்குவா படத்தை விமர்சிக்கின்றனர். சினிமா துறையில் படைப்பாற்றல் மற்றும் புதுமையான முயற்சிகளை வரவேற்க வேண்டும். தயாரிப்பாளரின் உழைப்பை பாராட்ட வேண்டும்'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    டைரக்டர் சீனுராமசாமி வெளியிட்டுள்ள பதிவில், "கல்விப் பணிக்கு வெகுகாலம் நன்மை செய்து வரும் சூர்யா போன்றவர்களை தனிப்பட்ட அவதூறு செய்வது என்பது மிகவும் வருத்தத்தை தருகிறது. திரைத்துறைக்கும் அதனை சார்ந்த ஏனைய தொழில் முனைவோர்களுக்கும் பாதுகாப்பற்ற தன்மையை இது உணர்த்துகிறது'' என்று குறிப்பிட்டு உள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.


    ×