என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A young woman who drank petrol so that her husband did not know that she drank alcohol"

    • 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
    • டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    கோவை,

    கோவை மாவட்டம் காரமடையை சேர்ந்த 24 வயது இளம்பெண். இவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இளம்பெண் பீர் வாங்கி குடித்தார். அப்போது இளம் பெண்ணிடம் இருந்து மது வாசனை வந்தது. தான் மது குடித்ததை கணவர் கண்டுபிடித்து விடுவார் என்ற பயத்தில் இருந்த இளம் பெண் அவரது கணவர் மோட்டார் சைக்கிளில் ஊற்றுவதற்காக வைத்திருந்த பெட்ரோலை எடுத்து குடித்தார். சிறிது நேரத்தில் வாந்தி எடுத்து மயங்கினார். இதனை பார்த்து வீட்டில் இருந்தவர்கள் உடனடியாக இளம் பெண்ணை மீட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து அன்னூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×