என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A young girl missing"

    • இளம்பெண் பட்டப்படிப்பை முடித்துவிட்டு தனியார் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார்.
    • 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50,000 பணம் காணாமல் போயிருந்தது.

    கோவை

    கோவை கணபதியை சேர்ந்தவர் 22 வயது இளம்பெண். பட்டப்படிப்பை முடித்துவிட்டு அந்த பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தின் வேலை செய்து வந்தார். இளம் பெண்ணுக்கு அவரது குடும்பத்தினர் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். இதையடுத்து மாப்பிள்ளை வீட்டார் பெண் பார்ப்பதற்காக இளம்பெண் வீட்டிற்கு வர முடிவு செய்தனர்.

    சம்பவத்தன்று இரவு அந்த இளம்பெண் அறையில் தூங்குவதற்காக சென்றார். மறுநாள் காலை அந்த இளம் பெண்ணின் தாயார் அவரை எழுப்புவதற்கு அறைக்கு சென்றார். அப்போது அந்த இளம்பெண் மாயமாகி இருந்தார்.

    மேலும் வீட்டில் இருந்த 4 பவுன் தங்க நகை மற்றும் ரூ.50,000 பணம் காணாமல் போயிருந்தது. இதையடுத்து குடும்பத்தினர் அவரை அக்கம் பக்கம் மற்றும் உறவினர் வீடுகளில் தேடி பார்த்தனர். ஆனால் அவர் கிடைக்கவில்லை. இது எடுத்து அந்த இளம் பெண்ணின் தாயார் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகை மற்றும் பணத்துடன் மாயமான இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.

    ×