என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A tiger resting in a meadow"

    • இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்
    • நவாநகா் பேலஸ் பகுதியில் உள்ள புல்வெளியில் புலி படுத்திருக்கும் காட்சிகள் தற்போது வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டி நகரை சுற்றியுள்ள பகுதிகளில் கடந்த சில தினங்களாக சிறுத்தை, கரடி, காட்டெருைம போன்ற வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது.

    குறிப்பாக இரவு நேரங்களில் குடியிருப்பு பகுதிகளுக்குள் வனவிலங்குகள் சுற்றி திரிவதால் மக்கள் அச்சத்திலேயே உள்ளனர்.

    இதற்கிடையே கடந்த சில தினங்களாக ஊட்டி நகரின் முக்கிய பகுதியான மாா்லிமந்து, நவா நகா் பேலஸ் பகுதிகளில் புலியின் நடமாட்டம் இருப்பதாகவும், 2 மாடுகளை அடித்து கொன்றதாகவும் அப்பகுதியை சேர்ந்த மக்கள் வனத்துறையிடம் புகார் தெரிவித்தனர். அதன்பேரில் வனத்துறையினரும் ஊட்டி நகர் பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தினர்.

    இந்நிலையில் நவாநகா் பேலஸ் பகுதியில் உள்ள புல்வெளியில் புலி படுத்திருக்கும் காட்சிகள் தற்போது வலைதளங்களில் பகிரப்பட்டு வருகின்றன. இந்த காட்சியானது வேகமாக பரவி வருகிறது.

    குடியிருப்பையொட்டி புல்வெளி பகுதியில் புலி சுற்றி திரியும் காட்சி அப்பகுதி மக்களை மிகவும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. அவர்கள் இரவு நேரங்களில் வீடுகளை வீட்டு வெளியில் வரவே அச்சப்படுகின்றனர். மேலும் வனத்துறையினரும் இரவு நேரங்களில் வெளியில் வருவதையும், தவிர்க்குமாறும், பாதுகாப்புடன் இருக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.

    ×