என் மலர்
நீங்கள் தேடியது "A student was poisoned"
- பள்ளிக்கு செல்ல முயன்ற போது வாந்தி எடுத்தார்.
- அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார்.
பொள்ளாச்சி,
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள கோவிந்தாபுரத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மகள் சானூ (வயது 15).
இவர் திவான்சாபுதூரில் உள்ள அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரது தந்தை கடந்த ஒரு வருடங்களுக்கு முன்பு இறந்தார். தந்தை இறந்த துக்கம் தாங்காமல் சானூ மிகுந்த மனவேதனை அடைந்தார்.
எனவே தனது தந்தை இறந்த அதே நாளில் அவரிடம் செல்ல சானூ முடிவு செய்தார். அதன்படி வீட்டில் இருந்த அவர் சாணிப்பவுடரை கரைத்து குடித்தார். பின்னர் தனது சகோதரியுடன் பள்ளிக்கு புறப்பட்டு சென்றார்.
மீனாட்சிபுரம் ரெயில்வே கேட் பஸ் நிறுத்தத்தில் இறங்கி பள்ளிக்கு செல்ல முயன்ற போது சானூ வாந்தி எடுத்தார். இதனை பார்த்து அவரது சகோதரி அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது சாணிப்பவுடரை குடித்து விட்டதாக தெரிவித்தார். இதனையடுத்து சானூவை அவரது சகோதரி அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மீட்டு அந்த பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அழைத்து சென்றார்.
அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் சானூ மேல் சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






