என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "A fire broke out in an old iron warehouse"

    • வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் செயல்பட்டு வந்தது.
    • தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

    கோவை,

    கோவை செட்டிபாளையம் ரோடு பகுதியில் பழைய இரும்பு மற்றும் பல்வேறு வீட்டு உபயோக பொருட்கள் வைக்கப்பட்டுள்ள குடோன் செயல்பட்டு வந்தது.

    நேற்று நள்ளிரவு இந்த குடோனில் திடீரென தீ பிடித்தது. வேகமாக பரவிய தீ குடோன் முழுவதும் பற்றி கொழுந்து விட்டு எரிந்தது. இதுகுறித்து கிணத்துக்கடவு தீயணைப்புதுறையினருக்கும் செட்டிபாளையம் போலீஸ் நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

    சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு துறையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தீ எளிதாக பரவும் வகையிலான பொருட்கள் மூலமாக தீப்பிடித்ததா, மின் வயர் பழுது காரணமாக தீப்பிடித்ததா, வேறு ஏதாவது செயல்பாடு காரணமாக தீ பரவியதா என செட்டிபாளையம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர். இந்த தீயினால் பல லட்ச ரூபாய் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகிவிட்டதாக தெரிகிறது.

    ×