search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Toyota Glanza"

    டொயோட்டா நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஹேட்ச்பேக் கார் வெளியீட்டு முன் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. #Toyota



    டொயோட்டா நிறுவனத்தின் கிளான்சா ஹேட்ச்பேக் கார் வெளியீட்டு முன் விற்பனையகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருக்கிறது. டொயோட்டா கிளான்சா கார் மாருதி சுசுகி பலேனோ மாடலின் பேட்ஜ்-என்ஜினியரிங் செய்யப்பட்ட டொயோட்டா நிறுவனத்தின் ஹேட்ச்பேக் கார் ஆகும்.

    மாருதி சுசுகி மற்றும் டொயோட்டா நிறுவனங்கள் தொழில்நுட்பம் மற்றும் வாகன விவரங்களை பகிர்ந்து கொள்ள ஒப்பந்தம் செய்து கொண்டன. அந்த ஒப்பந்தத்தின் படி அறிமுகமாக இருக்கும் முதல் காராக கிளான்சா இருக்கிறது. டொயோட்டா கிளான்சா கார் பார்க்க கிட்டத்தட்ட மாருதி சுசுகி பலேனோ போன்றே காட்சியளிக்கிறது.



    இந்தியாவில் டொயோட்டா கிளான்சா கார் அடுத்த மாதம் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. அந்த வகையில் வெளியீட்டுக்கு ஒரு மாத காலம் இருக்கும் நிலையில், கிளான்சா கார் விற்பனையகங்களுக்கு வழங்கும் பணிகளை டொயோட்டா துவங்கி இருக்கிறது.

    வடிவமைப்பின் படி பலேனோ மற்றும் கிளாசா ஒரேமாதிரி காட்சியளித்தாலும், கிளான்சா காரின் முன்புறம் சில மாற்றம் செய்யப்பட்டு டொயோட்டா வழக்க வடிவமைப்பை பிரதிபலிக்கிறது. மற்றபடி பம்ப்பர், ஏர் டேம் உள்ளிட்டவை புதிய வடிவமைப்பை பெற்றிருக்கின்றன.



    காரின் உள்புறம் ஸ்டீரிங் வீலில் பேட்ஜிங் செய்யப்படுவதை தவிர வேறு மாற்றங்கள் எதுவும் செய்யப்படவில்லை. அந்த வகையில் புதிய காரில் ஒரே டேஷ்போர்டு, ஸ்டீரிங் வீல் வடிவமைப்பு மற்றும் பிளாக்-புளு தீம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் 7-இன்ச் தொடுதிரை வசதி மற்றும் ஸ்டீரிங் மவுண்ட் செய்யப்பட்ட கண்ட்ரோல்களை கொண்டிருக்கிறது. 

    டொயோட்டா கிளான்சா கார் 1.2 லிட்டர் மைல்டு-ஹைப்ரிட் 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. பாதுகாப்பு அம்சங்களை பொருத்தவரை புதிய ஹேட்ச்பேக் காரில் டூயல்-ஏர்பேக், ஏ.பி.எஸ்., இ.பி.டி., சீட்பெல்ட் ரிமைண்டர், ஸ்பீடு அலெர்ட் மற்றும் மேலும் சில அம்சங்கள் வழங்கப்படலாம்.

    புகைப்படம் நன்றி
    டொயோட்டா நிறுவனத்தின் புதிய கார் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. புதிய கார் கிளான்சா என அழைக்கப்படுகிறது. #Toyota



    டொயோட்டா மற்றும் மாருதி நிறுவனங்கள் இணைந்து வியாபாரம் செய்ய இருப்பதாக 2017 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் இருநிறுவனங்கள் கூட்டு முயற்சியில் உருவாகும் முதல் கார் மாருதி பலேனோ மாடலை தழுவி உருவாகியிருக்கிறது. மேலும் டொயோட்டா நிறுவனம் புதிய பிரீமியம் ஹேட்ச்பேக் காரின் டீசரை வெளியிட்டுள்ளது.

    அந்த வகையில் புதிய டொயோட்டா கார் கிளான்சா என அழைக்கப்படுகிறது. மாருதி சுசுகி நிறுவனம் டொயோட்டா பிராண்டிங்கில் பலேனோ கார் ஜூன் மாதத்திற்குள் வெளியாகலாம் என தெரிவித்தது. புதிய டீசர் புகைப்படத்தில் காரின் பின்புறம் மட்டும் காட்சியளிக்கிறது.



    இதில் கார் பார்க்க பலேனோ போன்றே தெரிகிறது. அந்த வகையில் புதிய கிளான்சா மாடல் காரில் புதிய கிரில் மற்றும் முன்புறம் சிறிதளவு மாற்றம் செய்யப்பட்டிருக்கும் என தெரிகிறது. தற்சமயம் வெளியாகியிருக்கும் தகவல்களின் படி டொயோட்டா கிளான்சா கார் இந்தியாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படும் என கூறப்படுகிறது.

    டொயோட்டா கிளான்சா கார் இரண்டு பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர், 4-சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன்களில் வெளியாகும் என தெரிகிறது. இந்த என்ஜினுடன் 5-ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் CVT கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
    ×