search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Indore pitch"

    • இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று ஐசிசி மதிப்பீடு செய்ததை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது.
    • மோசமான பிட்ச் என்ற மதிப்பீட்டை திருத்தி சராசரிக்கு கீழான பிட்ச் என்று மதிப்பீடு வழங்கியுள்ளது.

    இந்தூர் பிட்ச்சை படுமோசம் என்ற ஐசிசி-யின் மதிப்பீட்டை எதிர்த்து பிசிசிஐ செய்த அப்பீலை அடுத்து, அதை மறுசீராய்வு செய்த ஐசிசி அப்பீல் பேனல் இந்தூர் பிட்ச் சராசரிக்கும் கீழான பிட்ச் என்று கூறியுள்ளது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என இந்திய அணி வென்றது. நாக்பூர் மற்றும் டெல்லியில் நடந்த முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணியும், இந்தூரில் நடந்த 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்றன. அகமதாபாத்தில் நடந்த 4வது டெஸ்ட் போட்டி டிராவில் முடிந்தது. இதையடுத்து 2-1 என டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றது.

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நடந்த இந்தூர் ஆடுகளத்தில் முதல் ஓவரிலிருந்தே பந்து திரும்பியது. வெறும் 2 நாள் மற்றும் ஒரு மணி நேரத்தில் அந்த போட்டி முடிவடைந்தது. இதையடுத்து அந்த ஆடுகளத்தின் மீது விமர்சனங்கள் எழுந்தன. இதனால் ஆடுகளத்தை மதிப்பீடு செய்த ஐசிசி, இந்தூர் ஆடுகளம் மோசமானது என்று மதிப்பீடு செய்ததுடன், 3 டீமெரிட் புள்ளிகளையும் வழங்கியது.

    இந்நிலையில், இந்தூர் ஆடுகளத்தை மோசமானது என்று ஐசிசி மதிப்பீடு செய்ததை எதிர்த்து பிசிசிஐ மேல்முறையீடு செய்தது. இதையடுத்து இந்தூர் ஆடுகளத்தை மறுசீராய்வு செய்த ஐசிசி அப்பீல் பேனல், ஏற்கனவே வழங்கப்பட்ட மோசமான பிட்ச் என்ற மதிப்பீட்டை திருத்தி சராசரிக்கு கீழான பிட்ச் என்று மதிப்பீடு வழங்கியுள்ளது. அதனால் டீமெரிட் புள்ளிகள் 3-லிருந்து 1 ஆக குறைக்கப்பட்டுள்ளது.

    • இந்தூர் மைதான ஆடுகளம் மோசம் என்று ஐ.சி.சி. நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.
    • இந்தூர் ஆடுகளம் மோசம் என்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இந்தூரில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதிய 3-வது டெஸ்ட் போட்டி 3 நாட்களிலேயே முடிவடைந்தது. இந்தூர் மைதான ஆடுகளம் மோசம் என்று ஐ.சி.சி. நடுவர் கிறிஸ் பிராட் தனது அறிக்கையில் குறிப்பிட்டார். அந்த ஆடுகளத்துக்கு 3 அபராத புள்ளிகளை வழங்கினார்.

    இந்த நிலையில் இந்தூர் ஆடுகளம் மோசம் என்ற தீர்ப்பை எதிர்த்து இந்திய கிரிக்கெட் வாரியம் அப்பீல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதுதொடர்பாக கிரிக்கெட் வாரிய அதிகாரி ஒருவர் கூறும் போது, `நாங்கள் நிலைமையை ஆய்வு செய்து முடிவெடுப் போம்' என்றார். ஐ.சி.சி. விதிகளின்படி மேல்முறையீடு செய்ய இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு 14 நாட்கள் அவகாசம் உள்ளது. ஒரு மைதானம் 5 அல்லது அதற்கு மேற்பட்ட அபராத புள்ளிகளை பெற்றால் அங்கு 12 மாதங்களுக்கு சர்வதேச போட்டிகளை நடத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. 

    ×