என் மலர்
நீங்கள் தேடியது "2600 Ton urea"
- அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லையென்றாலும் வடகிழக்கு பருவமழை தொடர்வதால் விவசாயிகள், சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
- நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.
நெல்லை:
நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங் களில் தற்போது பிசான சாகுபடி பணிகள் நடை பெற்று வருகிறது.
அணைகளில் போதிய நீர் இருப்பு இல்லையென்றாலும் வடகிழக்கு பருவமழை தொடர்வதால் விவசாயிகள், சாகுபடி பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து உரங்களை தடையின்றி வழங்கும் பொருட்டு வெளி மாநிலங்கள் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து தென்மாவட்டங்களுக்கு உரங்கள் கொண்டு வரப்படுகிறது. இன்று காலை சென்னை மணலியில் இருந்து 1,350 டன் யூரியா ரெயில் மூலம் நெல்லை வந்தது.
இதைப்போல் தூத்துக்குடியில் இருந்தும் 1,250 டன் யூரியா நெல்லை வந்தது. இவை நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்பட்டது.






