என் மலர்
நீங்கள் தேடியது "2 teenagers tried to commit suicide"
- மதுகுடித்து விட்டு குடிபோதையில் 2 பேர் பஸ்சில் ஏறினர்.
- கண்டக்டரை சக பயணிகள் கண்டித்தனர்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பூர் மாவட்டம் பல்லடத்திற்கு நேற்று மாலை 3.45 மணிக்கு அரசு பஸ் சுமார் 56 பயணிகளுடன் சென்றது. பஸ் அன்னூர் சாலையில் சென்ற போது புதுமார்க்கெட் அருகில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுகுடித்து விட்டு குடிபோதையில் 2 பேர் பஸ்சில் ஏறினர்.
கண்டக்டரிடம் பூபதியிடம் பயண டிக்கெட் வாங்கும் போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதனால் கண்டக்டரை தகாத வார்த்தைகளால் அவர்கள் திட்டினர். இதனை கண்டித்த சக பயணிகளையும் அவர்கள் திட்டினர்.
2 பேரையும் கீழே இறக்கி விடும் படி பயணிகள் கூறினர். ஆத்திரம் அடைந்த 2 பேரும் பஸ்சில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்யப் போவதாக மிரட்டினர். அவர்கள் கீழே குதித்து விபரீதம் எதுவும் நடந்து விடக்கூடாது என்பதால் அவர்களை கண்டக்டர் தடுத்தார்.
இப்படியே 2 பேரும் தொடர் அட்டூழியத்தில் ஈடுபட்டு வந்தனர். அதற்குள் அன்னூர் பஸ் நிலையம் வந்தது. அங்கு பஸ் நின்றதும் 2 பேரும் இறங்கி அங்கிருந்து நழுவினர்.
குடிபோதையில் தொல்லை கொடுத்த 2 பேரையும் பஸ்சில் இருந்து இறக்கி விடாதது ஏன் என கேள்வி எழுப்பி கண்ட க்டரை சக பயணிகள் கண்டித்தனர்.






