search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "135 beneficiaries in the"

    • மனுநீதிநாள் முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.
    • 135 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை வழங்கினார்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், பர்கூர் ஊராட்சி, கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளி வளாகத்தில் மனுநீதிநாள் முகாமில் மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது.

    இம்மனு நீதிநாள் முகாமில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் சார்பில் 11பயனாளிகளுக்கு பிறப்பு சான்றிதழ்களும், 28 பயனாளிகளுக்கு மின்னணு வாக்காளர் அடையான அட்டையினையும்,

    23 பயனாளிகளுக்கு குடும்ப அட்டையில் திருத்தம் மற்றும் குடும்ப அட்டையில் தொலைபேசி எண் மாற்றம் செய்யப்பட்ட தற்கான ஆணையினையும், 24 பயனாளிகளுக்கு பழங்குடியினர் சாதி சான்றிதழ்களையும், 8 பயனாளிகளுக்கு பழங்குடியினர் நலவாரிய அட்டையினையும்,

    11 பயனாளிகளுக்கு புதிய ஆதார் அட்டை யினையும் மற்றும் 33 பயனாளிகளுக்கு ஆதார் அட்டை புதுப்பித்த ஆணையினையும் என 135 பயனாளிகளுக்கு பல்வேறு சான்றிதழ்களை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் இம்முகாமில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து பெற்றுக்கொண்டு இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளு மாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    முன்னதாக கத்திரிமலை அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளியினை கலெக்டர் ஆய்வு மேற்கொண்டு மாணவ, மாணவிகளிடம் கலந்துரையாடினார்.

    மேலும் மாணவ, மாணவி களின் கல்வித்திறனை மேம்படுத்தும் வகையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்ற சிறப்பு வகுப்பினையும் பார்வையிட்டார்.

    தொடர்ந்து கத்திரிமலை மாதம்பட்டி மற்றும் மலையம்பட்டி ஆகிய பழங்குடியினர் பகுதியில் பாரத பிரதம மந்திரி குடியிருப்பு திட்டத்தின் கீழ் தலா ரூ.2.40 லட்சம் மதிப்பீட்டில் 15 வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும்,

    பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் தலா ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் 20 வீடுகள் கட்டப்பட்டுள்ளதையும் மற்றும் இப்பகுதிமக்கள் பயன்பெறும் வகையில் தன்னார்வலர்கள் மூலமாக ரூ.2.65 லட்சம் மதிப்பீட்டில் மாவு அரைக்கும் எந்திரம் வழங்கப்பட்டு அதன் பயன்பாடுகளையும் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    இம்முகாமில் தனித்துணை கலெக்டர் ராஜ கோபால், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சரவணன், அந்தியூர் தாசில்தார் பெரிய சாமி, அந்தியூர் வட்டார வளர்ச்சி அலுவலர் சரவணன், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

    ×