என் மலர்

  நீங்கள் தேடியது "+1 Student"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம்
  • போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.

  கோவை:

  கோவை மாவட்டம் நெகமத்தை சேர்ந்தவர் 17 வயது மாணவி. இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.

  மாணவிக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலமாக திருப்பத்தூர் அருகே உள்ள ரெட்டியூரை சேர்ந்த அரவிந்தன் (வயது 23) என்ற வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் இது காதலாக மாறியது. 2 பேரும் அடிக்கடி செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

  இந்தநிலையில் கோவைக்கு வந்த அரவிந்தன் திருமண ஆசை காட்டி மாணவியை கடந்த 6-ந் தேதி கடத்தி சென்றார். மாணவியை அவர் வாணியம்பாடியில் உள்ள ஒரு கோவிலில் வைத்து திருமணம் செய்தார்.

  பின்னர் அரவிந்தன் மாணவியுடன் அந்த பகுதியில் உள்ள தனது அத்தை வீட்டில் தங்கி இருந்தார். அங்கு வைத்து மாணவியை அவர் பலமுறை பாலியல் பலாத்காரம் செய்தார்.

  இது குறித்து மாணவி செல்போன் மூலமாக தனது பெற்றோருக்கு தகவல் தெரிவித்தார். மேலும் தான் இருக்கும் இடத்தையும் கூறினார். உடனடியாக மாணவியின் பெற்றோர் அவர் தங்கி இருந்த இடத்துக்கு சென்று அவரை மீட்டனர். பின்னர் அரவிந்தனை நெகமம் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரணை நடத்தினர்.

  பின்னர் 17 வயது மாணவியை கடத்தி சென்று திருமணம் செய்து கற்பழித்த அரவிந்தன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். பின்னர் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.  

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • மாயமான பள்ளி மாணவர் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
  • தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர்.

  உத்தமபாளையம்:

  தேனி மாவட்டம் உத்தமபாளையம் கல்லறை தோட்ட தெருவை சேர்ந்தவர் ஸ்ரீபன். டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மகன் மாதவன்(16). இவர் ராயப்பன்பட்டியில் உள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். கடந்த 18-ந்தேதி வீட்டைவிட்டு வெளியே சென்ற மாதவன் மீண்டும் வீடு திரும்பவில்லை.

  நண்பர்கள் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. இதனையடுத்து உத்தம பாளையம் போலீஸ் நிலையத்தில் ஸ்ரீபன் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையிலான போலீசார் மாயமான மாணவனை தீவிரமாக தேடி வந்தனர். இந்நிலையில் கல்லறை தோட்டம் பின்புறம் உள்ள கிணற்றின் மேல் மாதவன் அணிந்திருந்த செருப்பு மற்றும் டாலர் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதனையடுத்து தீயணைப்புத்துறையினர் உதவியுடன் போலீசார் அங்கு விரைந்து சென்றனர். அந்த கிணற்றில் தண்ணீர் அதிகளவு இருந்ததால் மின்மோட்டார் மூலம் சுமார் 4 மணிநேரம் தண்ணீரை வெளியேற்றினர். அதன்பின்னர் கிணற்றுக்குள் தேடியபோது மாதவன் உடல் சடலமாக கிடந்தது. அதனை மீட்ட போலீசார் பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  இந்த கிணற்றில் தானாக விழுந்திருக்க வாய்ப்பில்லை. எனவே தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக அவரது பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் மாதவனின் நண்பர்கள் மற்றும் அவருடன் நெருக்கமாக இருந்தவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  ×