என் மலர்
நீங்கள் தேடியது "ஸ்நாக்ஸ்"
- இந்த ஸ்நாக்ஸ் சத்தானது மற்றும் சுவையானது.
- கோதுமை கார பொரி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கோதுமை பொரி - 100 கிராம்
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
கேரட் துருவல் - 2 டீஸ்பூன்
தக்காளி சிறியது - 1 பொடியாக நறுக்கியது
வறுத்த வேர்க்கடலை - 3 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
சாட் மசாலா - அரை தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - 1 தேக்கரண்டி
கொத்தமல்லி, கறிவேப்பிலை- சிறிதளவு
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - 2 தேக்கரண்டி
செய்முறை
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கோதுமை பொரியை போட்டு 5 நிமிடங்கள் மிதமான தீயில் வதக்கவும்.
* அடுத்து அதில் மஞ்சள் தூள், சாட் மசாலா, மிளகாய் தூள், வேர்க்கடலை, உப்பு சேர்த்து வறுக்கவும். இவ்வாறு செய்து வைத்துக்கொள்ள வேண்டும். சாப்பிடும் போது இதனுடன் வெங்காயம், தக்காளி, கேரட் துருவல், கொத்தமல்லி, கறிவேப்பிலை, எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான கோதுமை கார பொரி ரெடி.
- பஜ்ஜி என்றாலே அனைவரது நாவில் இருந்தும் நீர் ஊறும்.
- பன்னீர் பஜ்ஜி குழந்தைக்கு ஒரு சிறந்த ஸ்நாக்ஸாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 200 கிராம்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
பன்னீரை வேண்டிய வடிவில் வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள், பேக்கிங் சோடா மற்றும் உப்பு சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, பஜ்ஜி மாவு பதத்திற்கு கரைத்துக் கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கிய பன்னீர் துண்டுகளை கடலை மாவு கலவையில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சுவையான பன்னீர் பஜ்ஜி ரெடி!!!
- இன்று பன்னீரைக் கொண்டு அட்டகாசமான போண்டா செய்யலாம்.
- இது அற்புதமான ஸ்நாக்ஸ் மட்டுமின்றி, எளிதில் செய்யக்கூடிய ரெசிபி.
தேவையான பொருட்கள்:
பன்னீர் - 300 கிராம்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/4 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
துருவிய இஞ்சி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
புதினா - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
பேக்கிங் சோடா/சமையல் சோடா - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
* ஒரு பௌலில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு மற்றும் உப்பு சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு அதனுடன் மிளகாய் தூள், மிளகுத் தூள், கரம் மசாலா, சீரகப் பொடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லி, புதினா மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தேவையான அளவு நீரை ஊற்றி போண்டா பதத்திற்கு ஓரளவு கெட்டியான பதத்தில் பிசைந்து கொள்ள வேண்டும்.
* பின் அதில் பன்னீர் துண்டுகள், பேக்கிங் சோடா சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், பிசைந்து வைத்துள்ள போண்டா மாவை சிறிது சிறிதாக போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான பன்னீர் போண்டா தயார்.
* அதை காரச்சட்னியுடன் சூடாக பரிமாறவும்.
- கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடுவதால் எலும்புகள் வலிமை பெறும்.
- கருணை கிழங்கை அடிக்கடி சாப்பிட பித்தம் கட்டுப்படும்.
தேவையான பொருட்கள்
கருணை கிழங்கு - 250 கிராம்
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - அரை தேக்கரண்டி
ஆம்சூர் பவுடர் - கால் தேக்கரண்டி
கரம்மசாலா தூள் - அரை தேக்கரண்டி
உப்பு, எண்ணெய் - தேவைக்கு
செய்முறை
கருணைக்கிழங்கை தோல் நீக்கி சதுரமான துண்டுகளாக நறுக்கி 5 நிமிடங்கள் வேக வைத்து உப்பு மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் மிளகாய் தூள், அரிசி மாவு, ஆம்சூர் பவுடர், கரம்மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய கருணைக்கிழங்கு துண்டுகளை ஒவ்வொன்றாக மாவில் முக்கி எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது சூப்பரான கருணை கிழங்கு பஜ்ஜி ரெடி.
- காபி, டீயுடன் சாப்பிட அருமையாக இருக்கும் இந்த சிக்கன் போண்டா.
- சிக்கன் போண்டாவை செய்வது மிகவும் சுலபம்.
தேவையான பொருட்கள் :
சிக்கன் கைமா – கால் கிலோ,
சின்ன வெங்காயம் – 50 கிராம்,
போண்டா மாவு – 250 கிராம்,
சிக்கன் மசாலா – 3 டேபிள்ஸ்பூன்,
மஞ்சள்தூள் – அரை டேபிள்ஸ்பூன்,
காய்ந்த மிளகாய் – 2,
பூண்டு – 5 பல்,
கறிவேப்பிலை – 2 ஆர்க்கு,
சோம்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,
மிளகு – ஒரு டேபிள்ஸ்பூன்,
தேங்காய்த் துருவல் – ஒரு கைப்பிடி அளவு,
பொட்டுக்கடலை – 50 கிராம்,
இஞ்சி – 2 சிறிய துண்டு,
கொத்தமல்லித் தழை – சிறிதளவு.
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
* சின்ன வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி, கறிவேப்பிலையை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* எலும்பில்லா சிக்கனை கொத்தி வாங்கவும். அதை நன்றாகக் கழுவி தண்ணீர் இல்லாமல் ஒரு கிண்ணத்தில் போடவும்.
* அத்துடன் சின்ன வெங்காயம், பொட்டுக்கடலை, காய்ந்த மிளகாய், சோம்பு, மஞ்சள்தூள், பூண்டு, இஞ்சி, மிளகு, சிக்கன் மசாலா, உப்பு, கறிவேப்பிலை, தேங்காய்த் துருவல் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
* கடாயில் எண்ணெய் விட்டு, நறுக்கிய கொத்தமல்லித்தழை, அரைத்த சிக்கன் கலவையைப் போட்டு நன்றாக வதக்கவும்.
* முக்கால் பாகம் வெந்ததும், ஆறவிட்டு உருண்டைகளாக உருட்டவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடாக்கவும்.
* போண்டா மாவைக் கரைத்து, அதில் சிக்கன் உருண்டைகளை மாவில் தோய்த்து எடுத்து, எண்ணெயில் (மிதமான சூட்டில்) பொரித்து எடுக்கவும்.
* அரைத்து வெந்த சிக்கன் பஞ்சு போல் மிருதுவாக இருப்பதால், சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடுவார்கள்.
* சூப்பரான சிக்கன் போண்டா ரெடி.
- பச்சை பட்டாணியை தவறாமல் எடுத்துகொள்பவர்களுக்கு வயிற்று புற்றுநோய் வராது.
- பட்டாணியை தொடர்ந்து சாப்பிடுபவர்களுக்கு ரத்த சோகை பிரச்சனை ஏற்படாது.
தேவையான பொருட்கள்
பச்சை பட்டாணி - 1 கப்,
கேரட் துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
தேங்காய்த்துருவல் - 3 டேபிள் ஸ்பூன்,
உப்பு - தேவைக்கு.
தாளிக்க
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
வெள்ளை உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - 1/2 டீஸ்பூன்,
வரமிளகாய் - 2, கறிவேப்பிலை - 6 இதழ்கள்.
மேலே தூவுவதற்கு
அரிந்த கொத்தமல்லித்தழை - 2 டேபிள் ஸ்பூன்.
செய்முறை
பச்சை பட்டாணியை அரை மணி நேரம் ஊற வைத்து உப்பு சேர்த்து குழையாமல் வேக விடவும்.
வாணலியில் 2 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி தாளிக்கக் கொடுத்தவற்றைத் தாளித்து வெந்த பட்டாணியைச் சேர்த்து வதக்கி கேரட் துருவல், தேங்காய்த்துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
கொத்தமல்லித்தழை தூவி கலந்துவிடவும்.
இப்போது சூப்பரான பட்டாணி கார சுண்டல் ரெடி.
- சிக்கனில் பல்வேறு வித்தியாசமான ரெசிபிகளை செய்யலாம்.
- மாலை நேரத்தில் குழந்தைகளுக்கு சிக்கன் சமோசா செய்து கொடுக்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் - 1/4 கிலோ ( எலும்பு நீக்கியது )
கொத்தமல்லி தழை - சிரிதளவு
எண்ணெய் - தேவையான அளவு
மைதா - 3 கப்
உப்பு - தேவையான அளவு
பச்சை மிளகாய் - 4
கரம் மசாலா - 1 ஸ்பூன்
வேகவைத்த பட்டாணி - ½ கப்
பெரிய வெங்காயம் - 1
செய்முறை
வெங்காயம், ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* பட்டாணியை வேகவைத்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு மைதாவை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, எண்ணெய் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு அடுப்பில் வைத்து நீர் வற்றும் வரையில் நன்கு வேகவைத்துக் கொள்ளவும். வெந்த சிக்கனை வேறு ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
* ஒரு கடாயில் 2 ஸ்பூன் அளவு எண்ணெய் விட்டு அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். வெங்காயம் வதங்கிய பின் அதில் கரம் மசாலா, உப்பு சேர்க்கவும்.
* பின்னர் வேக வைத்த பட்டாணி, சிக்கன், பச்சை மிளகாய், கொத்தமல்லி தழை சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
* மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டிக் கொள்ளவும். சப்பாத்தி போல் திரட்டி முக்கோண வடிவில் செய்து அதில் செய்து வைத்த சிக்கன் கலவையை போட்டு ஓரங்களில் தண்ணீர் தொட்டு நன்றாக மூடி விடவும். இவ்வாறு இருக்கின்ற எல்லா மாவையும் இதே போல செய்து ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் பார்த்துக் கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் செய்து வைத்த சமோசாக்களை போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து பரிமாறவும்.
* இப்போது சூப்பரான சிக்கன் சமோசா ரெடி.
- விருப்பப்பட்டால் பீட்சாவை வாங்கிச் சாப்பிடலாம். ஆனால், தொடர்ந்து சாப்பிடுவது நம் உடல்நலத்துக்கு நல்லதல்ல
- அதிக அளவில் இதைச் சாப்பிட்டால், உடலில் கொலஸ்ட்ரால் அளவு அதிகரிக்கும்.
தேவையான பொருட்கள்:
மைதா - 4 கப்
ஈஸ்ட் - 5 கிராம்
சீனி - அரை தேக்கரண்டி
உப்பு - ஒரு தேக்கரண்டி
எண்ணெய் - தேவையான அளவு
ஸ்டப்பிங் செய்ய:
பீட்ஸா சாஸ் - தேவையான அளவு
தக்காளி - ஒன்று
பெரிய வெங்காயம் - 1
கேரட் - ஒன்று
குடை மிளகாய் - பாதி
பச்சை மிளகாய் - ஒன்று
துருவிய சீஸ் - தேவையான அளவு
செய்முறை:
காய்கறிகளை சிறிது சிறிதாக நறுக்கிக் கொள்ளவும்.
வெதுவெதுப்பான தண்ணீரில், ஈஸ்ட், உப்பு மற்றும் சீனி சேர்த்து நன்றாக கலக்கிய பின்னர் ஒரு கப் மைதாவை சேர்த்து நன்கு கலக்கிக் கலவையை 10 நிமிடம் எடுத்து வைக்கவும்.
10 நிமிடம் கழித்து, 3 கப் மைதாவில் 4 தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, கலக்கி வைத்த கலவையை சேர்த்து நன்கு பிசைய வேண்டும். பரோட்டாவுக்கு பிசையும் மாவை விட சற்று மிருதுவாக பிசைய வேண்டும்.
பிசைந்த மாவினை ஒரு ஈரத் துணியால் மூடி ஒரு மணி நேரம் வைத்து பார்த்தால் அது இருமடங்காக அதிகரித்து இருக்கும்.
மாவினை வெளியே எடுத்து மீண்டும் நன்றாக பிசைந்து, மீண்டும் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
அரை மணி நேரம் கழித்து, அவன் ட்ரேயில் மாவை போட்டு சமமாக கையிலேயே விரித்து விடவும். ஓரங்களில் விரலால் ஒரே மாதிரியாக அழுத்தி விடவும்.
பீட்ஸா பேஸ் ரெடி.
இப்போது பீட்ஸா மீது சாஸ் தேவையான அளவு தடவிய பின்னர் காய்கறிகளை ஒன்றின் பின் ஒன்றாக தூவவும்.
துருவிய சீஸை தேவையான அளவு பரப்பி விடவும்.
பின் சிறிது எண்ணெய்யை சீஸ் மேல் ஆங்காங்கே சேர்க்கவும்.
பின்னர் பீட்ஸாவின் ஓரங்களிலும் எண்ணெய் தடவி விடவும். இதனால் வேகும் போது கிறிஸ்பியாக இருக்கும்.
பின் ட்ரேவை எலக்ட்ரிக் அடுப்பின் மேல் ஸிம்மில் வைத்து சூடாக்கவும்.
ஃப்ளேம் கொண்ட அடுப்பு எனில் ஃபுல் ஃப்ளேமில் தோசை கல்லை வைத்து அதன் மேல் ட்ரேவை வைக்கவும். ட்ரே நன்கு சூடானதும் எடுத்து விடவும்.
பீட்ஸாவின் ஓரங்கள் பொன்னிறத்தில் மாறி, சீஸ் காய்கறிகளுடன் நன்கு கலந்திருக்கும் போது வெளியே எடுக்கவும்.
இப்போது சூப்பரான பீட்சா ரெடி.
- கேழ்வரகில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன.
- கேழ்வரகில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும்.
ராகி எனும் கேழ்வரகு தென்னிந்திய மக்களின் முக்கிய உணவுப் பொருட்களில் ஒன்றாகும். இதில் புரதம், கால்சியம், இரும்புச்சத்து, பொட்டாசியம், பாலிபீனால் ஆகியவை நிறைந்துள்ளன. கேழ்வரகில் உள்ள அமினோ அமிலங்கள், ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகின்றன. இதில் உள்ள நார்ச்சத்து உடல் எடையைக் குறைப்பதற்கு உதவும். சரும ஆரோக்கியம், எலும்புகளின் வலிமை, முடி வளர்ச்சி போன்றவற்றுக்கும் கேழ்வரகில் உள்ள சத்துக்கள் பயன்படுகின்றன. கேழ்வரகைக் கொண்டு பாரம்பரிய சுவையுடன் தயாரிக்கப்படும் 'ராகி சிமிலி' செய்வது எப்படி என்று இங்கே பார்ப்போம்.
தேவையானப் பொருட்கள்:
கேழ்வரகு மாவு - 200 கிராம்
வெல்லம் - 100 கிராம்
வேர்க்கடலை - 100 கிராம்
எள் - 4 தேக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
உப்பு - ¼ தேக்கரண்டி
செய்முறை:
பாத்திரத்தில் கேழ்வரகு மாவுடன் சிறிது தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்தில் பிசைந்து, நெய் ஊற்றி சப்பாத்திகளாக சுட்டுக்கொள்ளவும்.
பின்னர் வாணலியில் எள் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்துக்கொள்ளவும்.
வறுத்த வேர்க்கடலையின் தோலை நீக்கி பொடித்துக்கொள்ளவும்.
கேழ்வரகு சப்பாத்தி ஆறியதும் மிக்சியில் போட்டு சற்று கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
அதனுடன் ஏலக்காய்த்தூள் மற்றும் வெல்லம் சிறிது சிறிதாக சேர்த்து நன்றாகப் பிசையவும். கலவை கையில் ஒட்டும் பதத்தில் வரும்போது உருண்டைகளாகப் பிடித்துக்கொள்ளவும்.
இப்பொழுது சுவையான மற்றும் சத்து மிகுந்த 'கேழ்வரகு சிமிலி' தயார்.
- மாலை நேர ஸ்நாக்ஸ்களில் பஜ்ஜிகளுக்கு என தனி இடம் உண்டு.
- இன்று பீட்ரூட்டில் பஜ்ஜி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
கடலை மாவு – 1 கப்,
பீட்ரூட் – 2 பெரியது
அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்,
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 1 டேபிள் ஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1/4 ஸ்பூன்,
பெருங்காயம் – சிறிதளவு,
உப்பு – தேவையான அளவிற்கு
எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு.
செய்முறை:
முதலில் பீட்ரூட்டை தோல் நீக்கி வட்ட வடிவில் வெட்டிகொள்ளவும்.
பிறகு, பீட்ரூட்டை வில்லைகளாக நறுக்கி தோசைக்கல்லில் எண்ணெய் விடாமல் சிறிது நேரம் போட்டு எடுக்கவும். பீட்ரூட் ஈரப்பதம் இல்லாமல் இருந்தால்தான்
பஜ்ஜி எண்ணெய் குடிக்காது என்பதை மனதில் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு அதனுடன் அரிசி மாவு, காஷ்மீரி மிளகாய்த்தூள், பேக்கிங் சோடா, பெருங்காயம், உப்பு போன்றவற்றை சேர்த்து
நன்றாக கலந்து கொள்ளவும்.
பின்னர் அவற்றுக்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பீட்ரூட் வில்லைகளை மாவில் தோய்த்து எண்ணெயில் போட்டு பொரித்து எடுக்கவும்.
இப்போது நீங்கள் எதிர்பாத்த டேஸ்டியான பீட்ரூட் பஜ்ஜி தாயார்.
இந்த பஜ்ஜிக்கு தேங்காய், கார சட்னி அல்லது சாம்பார் சேர்த்து ருசிக்கலாம்.
- கேரட் பஜ்ஜி தனித்துவமான சுவையுடன் அற்புதமாக இருக்கும்.
- இந்த பஜ்ஜி குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வகையில் ருசியாக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
கேரட் - கால் கிலோ
கடலை மாவு - 2 கப்
அரிசி மாவு - 1/2 கப்
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சாட் மசாலா - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
பேக்கிங் சோடா - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கேற்ப
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் கேரட்டின் தோலை நீக்கிவிட்டு, அதை மெல்லிய வட்டத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
* ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, ஓமம், மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் உப்பு சேர்த்து நன்கு கலந்து, பின் மெதுவாக நீரை ஊற்றி கட்டிகளின்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* அதில் பேக்கிங் சோடா மற்றும் பஜ்ஜி மொறுமொறுப்புடன் இருக்க சிறிது சூடான எண்ணெய் ஊற்றி 15 நிமிடம் அப்படியே விட்டு, பின் கிளறி விட வேண்டும்.
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், கேரட்டை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான கேரட் பஜ்ஜி தயார்.
- தினமும் கீரை சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
- கீரையில் குழம்பு, பொரியல் செய்து சாப்பிடுவதை போல் வடையும் செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள் :
கீரை - 1 கட்டு
உளுந்து - 200 கிராம்
கடலை பருப்பு - 50 கிராம்
பச்சை மிளகாய் - 2
இஞ்சி - 1 துண்டு
சீரகம் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - சுவைக்கு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை :
ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கிகொள்ளவும்.
கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும். ஊறியதும் ஒன்றும் பாதியுமாக அரைத்துக்கொள்ளுங்கள். தண்ணீர் இல்லாமல் அரைக்க வேண்டும். மாவு கையில் ஒட்டக் கூடாது.
கீரையை நன்றாக சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
அரைத்த மாவில் பச்சை மிளகாய், சீரகம், உப்பு, இஞ்சி, கீரை சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளுங்கள்.
பின் கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் மாவை எலுமிச்சை அளவு மாவு எடுத்து ஓட்டவடை அளவுக்கு வட்டமாக தட்டி நடுவே ஒரு ஓட்டை போட வேண்டும். பின் லாவகமாக எண்ணெயில் உடையாமல் போடுங்கள்.
பொன்னிறமாக பொரிந்ததும் வெளியே எடுத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் கீரை வடை தயார்.
இந்த வடைக்கு அரை கீரை, சிறு கீரை, பசலை கீரை, முருங்கைக்கீரை என எந்த கீரையும் போடலாம். எதுவாக இருந்தாலும் பொடியாக நறுக்க வேண்டும்.