என் மலர்
நீங்கள் தேடியது "பட்டதாரி வாலிபர் தற்கொலை"
சேதராப்பட்டு:
சேதராப்பட்டு புதுக் காலனியை சேர்ந்தவர் குட்டியாண்டி. இவரது மகன் முகிலன் (வயது 31). பட்டதாரியான இவர் தனது மனைவி பிரசன்னா தேவி மற்றும் மகள் நவ்யா ஆகியோருடன் சோரப்பட்டு பழைய காலனியில் வசித்து வந்தார்.
முகிலன் வேலைக்கு எதுவும் செல்லாமல் இருந்தார். இவருக்கும், இவரது மனைவி பிரசன்னா தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது.
இந்த நிலையில் நேற்று பிரசன்னா தேவி தன்னையும், மகளையும் வெளியே அழைத்து செல்லும்படி முகிலனிடம் கூறினார். அழைத்து செல்வதாக கூறி சென்ற முகிலன் அதே பகுதியில் உள்ள தனக்கு சொந்தமான மற்றொரு வீட்டுக்கு சென்றார்.
ஆனால், வெகு நேர மாகியும் கணவன் வராததால் சந்தேகம் அடைந்த பிரசன்னாதேவி அந்த வீட்டுக்கு சென்று பார்த்தார். அப்போது கணவர் தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் சேதராப்பட்டு போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருமங்கலம் அருகே உள்ள மையிட்டான் பட்டியைச் சேர்ந்தவர் சங்கரலிங்கம். இவரது மகன் சவுந்திரபாண்டி (வயது 29). ஆசிரியர் பயிற்சி படிப்பு (பி.எட்.) முடித்துள்ளார்.
வேலை தேடி வந்த சவுந்தரபாண்டி, அந்தப்பகுதியில் உள்ள மரத்தில் தூக்கில் பிணமாக தொங்குவதாக கள்ளிக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது சவுந்திர பாண்டியின் சட்டைப்பையில் இருந்த கடிதம் போலீசார் கையில் சிக்கியது. அதில், தனது சாவுக்கு ஞானமணி மற்றும் இளையராஜா தான் காரணம் என குறிப்பிட்டு இருந்தது.
அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர். அதே பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவரது மனைவி ஞானமணி (35)க்கும், சவுந்தர பாண்டிக்கும் பழக்கம் இருந்துள்ளது.
இளையராஜா என்பவருடன் ஞானமணி தொடர்பில் இருந்தாராம். இந்த விவகாரத்தில் தான் சவுந்தரபாண்டி தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதன் பேரில் ஞானமணி மற்றும் இளையராஜா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சவுந்தரபாண்டி சாவில் மர்மம் நிலவுவதாக அவரது தந்தை சங்கரலிங்கம் தெரிவித்துள்ளார். மகனை கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டிருக்கலாம் என கள்ளிக்குடி போலீசில் கொடுத்த புகாரில் தெரிவித்துள்ளார். இது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். #tamilnews






