என் மலர்
நீங்கள் தேடியது "தருமபுரி கலெக்டர் அலுவலகம்"
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு சோமன அள்ளியை அடுத்துள்ள சோம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனி. இவரது மனைவி ஜெயமதி (வயது46). இவர்களுக்கு வெண்ணிலா (27) என்ற மகள் உள்ளார்.
இன்று கலெக்டர் அலுவலகத்திற்கு தாய்-மகள் 2 பேரும் மனு கொடுக்க வந்தனர். அப்போது திடீரென கலெக்டர் அலுவலக வளாகத்தில் மண்எண்ணையை ஊற்றி ஜெயமதி தீக்குளிக்க முயன்றார். உடனே அங்கிருந்த போலீசார் சுதாரித்து கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர் மீது தண்ணீரை ஊற்றினர்.
இதையடுத்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ஜெயமதி கூறியதாவது:-
சோமனஅள்ளி கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வருகிறேன். எனக்கு வெண்ணிலா என்ற மகள் உள்ளார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த தென்னரசு என்பவருடன் கடந்த 9 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளோம். அவர்கள் தனியாக வீடு எடுத்து குடும்பம் நடத்தி வந்தனர்.
தென்னரசுக்கு வேறு ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு இருந்தது. இதனால் கணவன்-மனைவி இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இதனை நான் பல முறை சென்று சமாதானம் செய்து வைத்தேன். தென்னரசு விடம் கள்ள தொடர்பை கைவிட வேண்டும் என்று கண்டித்துள்ளேன்.
ஆனால் அவர் கள்ள தொடர்பு வைத்திருந்த பெண்ணை வீட்டிற்கு அழைத்து வந்தார். இதனால் அதிர்ச்சி அடைந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டோம். ஆனால் அவர் இனிமேல் அந்த பெண் இங்கே தான் இருப்பார் என்று கூறினார். இதனால் நாங்கள் இண்டூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தோம். ஆனால் போலீசார் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கலெக்டர் அலுவலகத்திற்கு மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு நான் எனது மகளுடன் மனு கொடுக்க வந்தேன். அப்போது நான் நடவடிக்கை எடுக்காத இண்டூர் போலீசாரை கண்டித்தும், எனது மகளின் கணவரை மீட்டுத்தர கோரியும் தீக்குளிக்க முயற்சி செய்தேன். அதற்கு முன்பே போலீசார் என்னை தடுத்து நிறுத்தினர்.
இந்தநிலையில் எங்களை தருமபுரி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.
பின்னர் போலீசார் எங்களிடம், விருப்பம் உள்ளவர்கள் யாருடனும் சேர்ந்து வாழலாம் என்று கோர்ட்டு தீர்ப்பு வழங்கியுள்ளது. கோர்ட்டு உத்தரவுபடி எங்களால் இந்த மனுவின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது என்றும், இருப்பினும் இது குறித்து நாங்கள் விசாரிக்கிறோம் என்றும் கூறினர். பின்னர் எங்களை மாலை வரை காவலில் வைத்து விட்டு, வீட்டிற்கு போலீசார் திருப்பி அனுப்பி வைத்தனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதே போன்று பெரியாம்பட்டி அடுத்துள்ள பூனத்த அள்ளி கிராமத்தை சேர்ந்த காளியம்மாள் (வயது45). இவரது மகள் ராசாத்தி (21).
இவர்கள் இருவரும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் கணவரை வேறு பெண்ணுடன் உள்ள தொடர்பில் இருந்து மீட்டு தரக்கோரியும், காரிமங்கலம் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்தும் தீக்குளிக்க முயன்றனர்.
இவர்களையும் தருமபுரி டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி. காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். பின்னர் சமாதானம் செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
கோர்ட்டு வழங்கிய தீர்ப்பையொட்டி இது போன்று பெண்கள் தங்கள் கணவரின் மீது கொடுக்கும் புகாரின் மீது போலீசார் நடவடிக்கை எடுக்க முடியாமல் திணறி வருகின்றனர். #tamilnews
தருமபுரி:
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே உள்ள எர்ரனஅள்ளி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 45), ஐஸ் வியாபாரி. இவரது மனைவி முருகம்மாள் (36). இவர்களது மகள் தமிழ்செல்வி. இவர் அங்குள்ள பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
மாரியப்பன் இன்று காலை தனது மகள் தமிழ்செல்வி (12) யுடன் வந்து தருமபுரி கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் 2 பேரையும் காப்பாற்றி அவர்கள் மீது தண்ணீர் ஊற்றி விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணையின்போது தீக்குளிக்க முயன்றது ஏன்? என்பது குறித்து மாரியப்பன் கூறியதாவது:-
நான் ஐஸ் வியாபாரம் செய்து வருகிறேன். எனது மனைவி முருகம்மாள் மகன் முறையுள்ள 19 வயதுள்ள வாலிபருடன் ஓடிவிட்டார். போகும்போது 13 பவுன் நகைகளையும், ரூ. 2 லட்சத்து 50 ஆயிரம் ரொக்கப்பணத்தையும் எடுத்து சென்றுவிட்டார். அவர்கள் 2 பேரையும் போலீசார் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் சுப்ரீம் கோர்ட்டு கள்ளத்தொடர்பு தப்பில்லை என்று தீர்ப்பு கூறி உள்ளது. இந்த தீர்ப்பால் நான் பாதிக்கப்பட்டு உள்ளேன். எனது மனைவியை போலீசார் கண்டுபிடித்து என்னிடம் ஒப்படைக்க வேண்டும். இதற்காக தான் நான் இன்று மகளுடன் வந்து தீக்குளிக்க முயற்சி செய்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.






